For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேப்டன் டிவியில் விஜயகாந்த் சோகப் பாட்டுக்கள் ஒளிபரப்பு!

Google Oneindia Tamil News

Vijayakanth
சென்னை: சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தலில் தேமுதிக படு தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், விஜயகாந்த்துக்குச் சொந்தமான கேப்டன் டிவியில் கேப்டன் நேரம் என்ற பெயரில் விஜயகாந்த் படத்தின் பாடல்களை ஒளிபரப்பினர். அதில் இடை இடையே சோகப் பாட்டையும் சேர்த்துப் போட்டனர்.

தேமுதிக தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் போது கேப்டன் டிவியில் இதுபோல சோகப் பாடல்களையும் தத்துவப் பாடல்களையும் ஒளிபரப்புவது என்பது தொடர் கதையாகியுள்ளது. இது தற்செயலானதா என்பது தெரியவில்லை. மேலும் தேமுதிக தொடர்பான முக்கியமான ஏதாவது ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், வழுக்கைத் தலைக்கு என்ன தீர்வு என்பது போன்ற நிகழ்ச்சிகளையும் காட்டிக் கொண்டிருப்பார்கள்.

இன்றும் கூட சங்கரன்கோவில் இடைத் தேர்தல் முடிவு வெளியாகி வரும் நிலையில் கேப்டன் டிவியில் கேப்டன் நேரம் என்ற பெயரில் விஜயகாந்த் நடித்த படங்களிலிருந்து பாடல்களை காட்டினர். டூயட் பாடல்களைப் போட்ட அவர்கள் இடை இடையே சோகப் பாடல்களையும் சேர்த்து ஒளிபரப்பினர்.

சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளர் முத்துக்குமார் பத்தாயிரம் ஓட்டுக்களைக் கூட பெற முடியாமல் கடுமையாக திணறிக் கொண்டுள்ளார். அக்கட்சிக்கு 4வது இடமே கிடைத்துள்ளது. டெபாசிட்டும் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

போட்டோ எடுக்க அனுமதிக்காததால் பத்திரிக்கையாளர்கள் தர்ணா

இதற்கிடையே, சங்கரன்கோவில் தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு எண்ணும் பணியை புகைப்படம் எடுக்க பத்திரிக்கையாளர்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. மேலும் மையத்திற்குள் செல்லவும் அனுமதி மறுத்தனர்.

இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதை அடுத்து 10 பேர் மட்டும் வெளியே இருந்து படம் எடுக்க அனுமதிக்கப்பட்டது. பின்னர் அதற்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்ததை அடுத்து, பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்கும் விதமாக தேர்தல் ஆணையம் நடந்து கொள்வதாக கூறி மீண்டும் பத்திரிக்கையாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

English summary
Captain TV shows songs from Vijayakanth while the result of Sankarankovil by poll was coming out. DMDK has lost its deposit and has been pushed to 4th spot in the poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X