For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விழுப்புரம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட மணல் குவாரிக்கு வருவாய்த்துறை சீல்

Google Oneindia Tamil News

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் முறையான அனுமதி இன்றி செயல்பட்ட மணல் குவாரி ஒன்றுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான பல மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் முறையான அனுமதி இன்றி சில மணல் குவாரிகள் செயல்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெடார்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது.

இதனையடுத்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் கனிம வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது முறையான அனுமதியின்றி செயல்பட்ட குவாரியைக் கண்டுபிடித்தனர். அந்த குவாரியில் இருந்து 500க்கும் மேற்பட்ட போலி ரசீதுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து விற்பனை மையத்திற்கு சீல் வைக்கப்பட்டு அங்கிருந்த பொக்லைன் இயந்திரமும், மணலும் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த சில மாதங்களாகவே இந்த முறையற்ற மணல் குவாரி செயல்பட்டதால் அரசுக்கு வரவண்டிய பல கோடி ரூபாய் தனியாருக்கு சென்றுள்ளது. இதனால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Revenue department officials have shut down a sand quarry in Villupuram. The quarry which functioned without proper permission has incurred several crore loss to the government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X