For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடங்குளம் போராட்டம்: 138 பேர் ஜாமீனில் விடுதலை

By Mathi
Google Oneindia Tamil News

138 Protesters get bail
திருநெல்வேலி: கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய 138 பேருக்கு நெல்லை முதலாவது அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கூடங்குளம் அணு உலையை திறக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் கூட்டப்புளியில் பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பழவூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட 178 பேரை கைது செய்து நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் கைதானவர்கள் அனைவரும் ஜாமீன் கேட்டு நெல்லை முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி ராஜ் 178 பேரில் 138 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

40 பேர் மீது முந்தைய வழக்குகள் உள்ளதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட வில்லை.

English summary
138 Protestors of KKNPP have got bail and released by the Thirunelveli Sessions Court today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X