For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்தத்துக்கான புதிய திட்டத்தால் குழப்பம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை விமான நிலையத்தில் வாகனங்களை நிறுத்துவதற்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டத்தால் பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

புதிய திட்டம்

அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டத்தின்படி பயணிகளை விமான நிலையத்துக்குள் வாகனங்கள் நுழையும்போது உள்ளே செல்லும் நேரத்தைக் குறிப்பிட்டு ஒரு ஸ்லிப் கொடுக்கப்படும். உள்ளே சென்ற 5 நிமிடத்துக்குள் வெளியேவராவிட்டால் ரூ60 அபராத கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் நடைமுறையில் இது சாத்தியமற்றது என்பதே உண்மை.

5 நிமிடம் சாத்தியமா?

உள்ளே செல்லும் வாகனம் பயணிகளை ஏற்றிக் கொண்டு அல்லது இறக்கிவிட்டு வருவதற்கு குறைந்தபட்சம் அரை மணிநேரமாவது ஆகும் என்பதே வாகன ஓட்டிகளின் கருத்து. இந்த நிலையில் ரூ60 அபராத கட்டணம் என்பது ஏற்க முடியாது என்கின்றனர் அவர்கள்.

மோதல் போக்கு

நியாயமற்ற அபராதத்தினால் வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் வசூலிப்போருக்கும் இடையே மோதல்தான் நடந்தேறுகின்றன. இந்த களேபரத்திலிருந்து தப்பித்துக்கொள்ள வாகனத்தை வெளியே நிறுத்தினாலும் அவர்களையும் போலீசார் அப்புறப்படுத்திவிடுகின்றனர்.

இதேபோல் அபராதக் கட்டணத்தை வசூலிக்க அமைக்கப்பட்டுள்ள பூத்களால் பயணிகளும் பொதுமக்களும் நடந்து செல்வதிலும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் வாகன நிறுத்தத்துக்கான புதிய திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை

English summary
Visitors to the Chennai airports are furious and angry as they had to shell out money after a new ticketing system was introduced at the entry and exit points today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X