பிரமிக்க வைக்கும் 'பிளாக் அன்ட் ஒயிட் சிஸ்டர்ஸ்'!

இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் கவுன்ட்டியில் உள்ள டட்லி நகரைச் சேர்ந்தவர் கய்லி ஹாட்ஜ்சன் (25). அவரது கணவர் ரெமி ஹோர்டர். அவர்கள் இருவரின் தாய்களும் வெள்ளையர்களாகவும், தந்தைகள் கருப்பினத்தவர்களாகவும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கய்லிக்கு அறுவை சிகிச்சை மூலம் 2 பெண் குழந்தைகள் பிறந்தன.
ஒரு நிமிடம் முந்திப் பிறந்த ரெமீக்கு நீல நிறக் கண்கள், தோல் பால் வண்ணத்திலும், தலைமுடி தங்க நிறத்திலும் உள்ளது. தங்கை கியான் அதற்கு நேர் மாறாகப் பிறந்துள்ளாள். அவளது தோலும், தலைமுடியும் நல்ல கருப்பு நிறத்தில் உள்ளது. இருவரும் தங்கள் 7வது பிறந்தநாளைக் கொண்டாடினர்.
நிறத்தில் வேறுபட்டவர்களாக இருந்தாலும், அக்காவும், தங்கையும் அவ்வளவு பாசமாக உள்ளனர். அவர்களைப் பார்ப்பவர்கள் இந்த 2 பேர் வெவ்வேறு நிறத்தில் உள்ளார்களே என்று கேட்கின்றனர். ஆனால் அந்த 2 சிறுமிகளும் ஒரு நாள் கூட நிறத்தைப் பற்றி பேசியதே இல்லை என்கிறார் தாய் கய்லி. அவர்கள் எப்பொழுதுமே இணைபிரியாமல், சந்தோஷமாக உள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அவர்கள் இருவரும் எப்பொழுதுமே ஒரே நிறத்தி்ல் தான் ஆடை அணிகின்றனர். அவர்களை புதிதாக பார்ப்பவர்கள் கய்லியிடம் இந்த 2 பேர் ஏன் ஒரே மாதிரியாக உடை அணிந்திருக்கிறார்கள் என்று கேட்கிறார்கள். அவர்கள் இரட்டையர்கள் என்று கய்லி சொல்வதைக் கேட்டு ஆச்சரியப்படுகின்றனர்.
அவர்களுக்கு அமெரிக்க பாப் பாடகி ரிஹான்னாவின் பாடல்களுக்கு ஆட்டம் போடுவது என்றால் மிகவும் பிடிக்குமாம். ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கிறார்களாம். இதைப் பார்த்து அவர்களின் தாய் பூரித்துப்போகிறார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications