சியாச்சினில் பனிப்பாறை சரிவில் சிக்கிய பாகிஸ்தான் படையினரை மீட்க உதவுகிறது அமெரிக்கா
இஸ்லாமாபாத்: இந்திய- பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சியாச்சின் மலைப்பகுதியில் பனிப்பாறை சரிவில் சிக்கி புதையுண்டு போன 135 பாகிஸ்தானிய படையினரை மீட்பதற்கு உதவுவதற்காக அமெரிக்கா ஒரு குழுவை அனுப்பியுள்ளது.
சியாச்சின் பனிமலைப் பகுதியில் 240 படையினரும் பொதுமக்களும் சியாச்சினில் பணியிலிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட பனிப்பாறை சரிவில் 135 பாகிஸ்தான் படையினர் புதைந்து போயினர். மேலும் பாகிஸ்தான் படையினருக்கான பணிபுரிந்த 11 பொதுமக்களையும் காணவில்லை.
இரண்டு நாட்களாகிவிட்ட நிலையில் புதையுண்டு போனவர்களின் கதி என்ன? எவரேனும் உயிரோடு இருக்கின்றனரா? என்பது பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. புதையுண்டு போனோரைத் தேடும் பணிகளை பாகிஸ்தான் ராணுவ தளபதி கயானி நேற்று பார்வையிட்டார்.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு உதவுவதாக இந்தியா ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் அமெரிக்காவும் ஒரு குழுவை அனுப்பி வைத்துள்ளது. 8 பேர் கொண்ட இக்குழுவினர் பாகிஸ்தான் படையினருக்கு ஆலோசனைகளை வழங்கும்.
அமெரிக்காவின் வான்தாக்குதலில் 24 படையினர் கடந்த நவம்பர் மாதம் கொல்லப்பட்டதால் பாகிஸ்தானுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் அமெரிக்கா உதவ முன்வந்திருப்பது இருதரப்பு விரிசலை சீர்செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு வந்துள்ள அமெரிக்க குழு, சியாச்சின் மலைக்கும் செல்லுமா என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை. உலகின் உயரமான போர்முனையான, இந்தியா - பாகிஸ்தானுக்கு முக்கிய எல்லைப் பகுதியான சியாச்சினுக்கு அமெரிக்காவின் குழு சென்றால் அது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications