For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சச்சின் நியமனத்தை நாடே வரவேற்குது, நீங்க வேற... ப.சிதம்பரம்

Google Oneindia Tamil News

டெல்லி: சச்சின் டெண்டுல்கரை ராஜ்யசபா நியமன உறுப்பினராக நியமித்ததை நாடே வரவேற்றுள்ளது. மேலும் அவரது நியமனத்தில் எந்தத் தவறும் இல்லை. முறையாகத்தான் எல்லாம் நடந்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சச்சினை ராஜ்யசபாவுக்கு நியமித்ததில் எந்தத் தவறும் இல்லை. இதை நாடே வரவேற்றுள்ளது. எனவே இதை எதிர்ப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.

சச்சின் நியமனத்தை டர்ட்டி பிக்சர்ஸ் என்று கூறியுள்ளார் பால் தாக்கரே. அவர் இன்னும் அந்தப் படத்தையேப் பார்க்கவில்லை. எனவே இதுகுறித்து அவர் அப்படிக் கருத்துத் தெரிவிக்க முடியாது.

விளையாட்டுத்துறையினரை நியமன உறுப்பினராக நியமிக்க முடியாது. அரசியல் சாசனத்தில் அதற்கு இடமில்லை என்று கூறுவது தவறு. அவர்கள் முதலில் அரசியல் சாசனத்தை சரியாகப் படித்து விட்டு வரட்டும். அரசியல் சாசனத்தில் விளையாட்டுப் பிரிவும் தெளிவாக இடம் பெற்றுள்ளது. எனவே அரசியல் சாசனப்படி சச்சின் நியமனம் செல்லுபடியாகக் கூடியதுதான் என்றார் ப.சிதம்பரம்.

English summary
Union Home Minister P. Chidambaram has defended the nomination of famous cricketer Sachin Tendulkar as the Rajya Sabha M.P. and said that there is nothing wrong in this. He said that entire nation has welcomed the move and there is no reason to oppose this. Commenting on the issues in which Shiv Sena supreme Bal Thakrey had said that nomination of Sachin Tendulkar as the Rajya Sabha M.P. was the Dirty Picture of the Congress, Chidambaram said that he has not watched the movie Dirty Picture and so can't comment on this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X