இடி மின்னல் தாக்கி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர் உள்பட 3 பேர் பலி
விழுப்புரம்: தமிழகத்தில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உள்பட 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்து உள்ள வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். அவர் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
அதே போன்று செஞ்சி அருகே உள்ள நாங்காத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அப்பர் மனைவி பூங்காவனம் (25) என்பவர் ஏரிக்கரை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருக்கையில் இடி மின்னல் தாக்கி அதே இடத்தில் பலியானார்.
மேலும் விருத்தாச்சலத்தை அடுத்த பரவலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் மனைவி செல்வி (35) வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது இடி மின்னல் தாக்கி உடல் கருகி இறந்தார்.
ஒரே நாளில் இடி மின்னல் தாக்கி மூன்று பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications