For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தங்க ஏற்றுமதியில் ரூ 464 மோசடி- எம்.எஸ்.டி.சி. நிறுவன முன்னாள் தலைவர் உட்பட மூவர் கைது

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: இந்தியாவிலிருந்து தங்கம் ஏற்றுமதி செய்வதில் ரூ464 கோடி மோசடி செய்த வழக்கில் அரசுக்கு சொந்தமான எம்.எஸ்.டி.சி எனப்படும் உலோகம் மற்ரும் கழிவு உலோக வர்த்தக நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மலாய் சென்குப்தா உட்பட 3 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

மோசடி எப்படி?

தங்கத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதற்குரிய பணத்தை நாட்டுக்குப் பெற்றுத் தருவதுதான் எம்.எஸ்.டி.சியின் பணி. கையாடல் செய்தால் கோடிக் கணக்கில் பணம் கிடைக்கும் என்பது எல்லாத் துறைகளிலும் உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு தெரிந்த கலை.

இந்த மோசடியில் கைது செய்யப்பட்டவர்கள் மூவர். தற்போது கைது செய்யப்பட்டவர்கள் எம்எஸ்டிசி முன்னாள் தலைவர் மலாய் சென்குப்தா. கொல்கத்தாவைச் சேர்ந்த தலைமைப் பொது மேலாளர் தபஸ் பாசு மற்றும் தில்லியைச் சேர்ந்த காப்பீட்டு ஆலோசகர் எஸ்.கே.சின்கா ஆகியோரும் சிக்கியுள்ளனர்.

தாங்கள் பணம் பார்ப்பதற்காக உஸ்மா ஜூவல்லரி, ஸ்பேஸ் மெர்கன்டைல், மாலி மருந்து தயாரிப்பு நிறுவனம், ஜோஷி தங்கம், வெள்ளி, ஜெம்ஸ் ஜூவல்லரி, பாண்ட் ஜெம்ஸ், இந்தோ போனிட்டோ பன்னாட்டு நிறுவனம் போன்ற நிறுவனங்களை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த நிறுவனங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தங்களது பெயரிலான நிறுவனத்துக்கு ஏற்றுமதி செய்கிறோம் என்று கூறி போலி ஆவணங்களைத் தாக்கல் செய்ய வலியுறுத்தியுள்ளனர்.

அந்த நிறுவனங்களும் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்ய அவற்றை ஏற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தங்களது பெயரிலான நிறுவனத்துக்கு ஏற்றுமதி செய்துள்ளனர்.

பின்னர் அந்த தங்கத்தை அந்த நாட்டின் வெளிச்சந்தையில் விற்று ஹவாலா மூலம் அந்த பணத்தை திரும்பக் கொண்டு வந்துள்ளனர்.

ஒரு நிறுவனத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தங்கத்துக்குரிய பணம் 170 நாட்களில் நாட்டுக்கு கிடைக்க வேண்டும். ஆனால் போலி ஆவணங்கள் மூலம் போலி நிறுவனத்தின் பெயரில் ஏற்றுமதி செய்யப்பட்ட தங்கத்துக்கான பணம் வரவே இல்லை.

இப்படி போலி ஆவணங்கள் எனத் தெரிந்தும் அதை ஏற்று வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ததில் அரசு நிறுவனமான எம்.எஸ்.டி.சி.க்கு ரூ464 கோடி இழப்பு ஏற்படுத்தி உள்ளனர் என்பது சி.பி.ஐ.யின் குற்றச்சாட்டு

தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூவரையும் வரும் 10-ந் தேதி வரை காவலில் வைக்கப்பட்டனர்.

English summary
The CBI has arrested former top officials of Metal and Scrap Trading Corporation (MSTC) in an alleged gold export scam worth Rs 464 crore in the public sector undertaking (PSU) by accepting forged documents from exporters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X