For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிணற்றில் போட்ட கல்லாகிப்போனது ராமஜெயம் கொலை வழக்கு

Google Oneindia Tamil News

Ramajeyam Murder
திருச்சி: திருச்சி ராமஜெயம் கொலை செய்யப்படு ஒருமாதம் ஓடிவிட்ட நிலையிலும் கொலையாளி யார்? எதற்காக கொலை நடந்தது என்பது குறித்து எந்த துப்பும் கிடைககாமல் போலீசார் தத்தளித்து வருகின்றனர்.

முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். ஸ்ரீரங்கம் அருகே திருவளர்ச்சோலை பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ராமஜெயம் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் மேற்பார்வையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ராமஜெயத்தின் குடும்ப உறுப்பினர்கள், வேலைக்காரர்கள், அப்பகுதியில் உள்ள இரவு வாட்ச்மேன், பிரபல ரவுடிகள், தொழில் அதிபர்கள், திமுக நிர்வாகிகள், அதிமுக பெண் கவுன்சிலர் என எத்தனையோ பேரையும் ஏழு தனிப்படையும் விசாரித்து முடித்துவிட்டது. ஆனால் ஒரே ஒரு துப்பு கூட கிடைக்காத நிலையில்தான் திருச்சி போலீஸ் இன்னமும் தவித்துக் கொண்டிருக்கிறது.

மேலும் ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் ராமஜெயத்தின் சகோதரர் நேரு இதுபற்றி ஒருமுறைகூட வாய் திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிணற்றில்போட்ட கல்லாக இருக்கும் ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம் எப்போதுதான் வருமோ?

English summary
One month after the murder of K.N. Ramajeyam, neither DMK workers nor the police had a clear idea about the motive or the identity of the assailants.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X