16 வயசுக்கு மேலதான்... 'வோக்' பத்திரிக்கை உறுதிமொழி!

வோக் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் இடம் பெறுவதை பலரும் பெருமையோடு சொல்லிக் கொள்வது வழக்கம். அப்படிப்பட்ட வோக் பத்திரிக்கை 2010ம் ஆண்டு பெரும் சர்ச்சையில் சிக்கியது. அந்த இதழில் 10 வயது சிறுமியின் படத்தை போட்டிருந்தனர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பார்க்கவே பரிதாபமான உடலமைப்புடன் கூடிய அந்த சிறுமியின் படம் பெரும் கண்டனங்களையும் வாரிக் கொண்டு வந்தது.
இதையடுத்து தற்போது வயது குறைவான, மெலிந்த உடல் அமைப்புடன் கூடிய மாடல்களை புகைப்படத்திற்குப் பயன்படுத்துவதில்லை என்ற முடிவை வோக் பத்திரிக்கையின் 19 நாடுகளின் ஆசிரியர்களும் ஒரு சேர முடிவு செய்துள்ளனர்.
அமெரிக்கா பதிப்பு ஆசிரியர் அன்னா வின்டூர் தலைமையில் இந்த உறுதிமொழியை எடுத்துள்ளனர் இவர்கள். இதுகுறித்து வோக் பத்திரிக்கையின் அதிபர்களில் ஒருவரும், கான்டிநாஸ்ட் இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவருமான ஜோனதன் நியூஹவுஸ் கூறுகையில்,
நல்ல ஆரோக்கியமே அழகு என்பதை வோக் நம்புகிறது. எனவேதான் 16 வயதுக்குக் குறைவான பெண்களின் படத்தை இனிமேல் பிரசுரிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம். மேலும் இனிமேல் ஆரோக்கியமான உடல் அமைப்பு கொண்ட பெண் அழகிகளின் படங்களை மட்டுமே பயன்படுத்துவோம். உலகம் முழுவதும் உள்ள வோக் பதிப்புகளின் ஆசிரியர்கள் இந்த உறுதிமொழியை பின்பற்றுவர் என்றார்.
ஆசிரியர்கள் எடுத்துள்ள இந்த உறுதிமொழியானது வரும் ஜூன் மாதப் பதிப்பில் இடம் பெறுமாம். 16 வயதுக்கு குறைவான மாடல்களை பயன்படுத்த மாட்டோம், ஒல்லிக்குச்சி நோஞ்சானாக காட்சியளிக்கும் மாடல் அழகிகளையும் பயன்படுத்த மாட்டோம் என்பது உள்பட 6 உறுதிமொழிகளை ஆசிரியர்கள் எடுத்துள்ளனராம்.
ஆரோக்கியமான முடிவுதான்...!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications