ஏர் இந்தியா பைலட்கள் ஸ்டிரைக்: 3 நாட்களில் 45 பேர் பணி நீக்கம்

உடல் நலம் சரியில்லை என்று கூறி ஏர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த 100 பைலட்டுகள் கடந்த 8ம் தேதி பணிக்கு வர மறுத்துவிட்டனர். இதனால் 5 சர்வதேச சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்ய நேரிட்டது. இதனால் எரிச்சலான மத்திய அரசு பைலட்டுகள் சங்கத்திற்கான அங்கீகாரத்தை ரத்து செய்தது. மேலும் பணிக்கு வராத பைலட்டுகளில் 10 பேரை பணியில் இருந்து நீக்கி ஏர் இந்தியா அதிரடியாக உத்தரவிட்டது.
இந்நிலையில் பைலட்டுகளின் திடீர் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று தெரிவித்தது. அப்படியும் யாரும் பணிக்கு திரும்பவில்லை. இது தவிர பணிக்கு வராதவர்களின் எண்ணிக்கை 100ல் இருந்து 300க்கும் மேல் அதிகரித்துள்ளது. இதையடுத்து நேற்று மேலும் 10 பைலட்டுகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
அப்படியும் அவர்கள் இன்று பணிக்கு திரும்பவில்லை. இதனால் ஏர் இந்தியா பல வெளிநாட்டு விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. ஏற்கனவே நஷ்டத்தில் ஓடும் ஏர் இந்தியாவுக்கு இந்த வேலைநிறுத்தத்தால் மேலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடுப்பான ஏர் இந்தியா நிர்வாகம் இன்று காலை 16 பேரையும், மாலை மேலும் 9 பைலட்டுகளையும் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து விமான போக்குவரத்து அமைச்சர் அஜித் சிங் கூறுகையில், உயர் நீதிமன்றம் சொல்லியே கேட்காத பைலட்டுகள், நான் சொல்வதை எங்கே கேட்கப் போகிறார்கள் என்றார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications