மதுரையில் "வேன் குண்டு" வெடிக்கும்: சென்னைக்கு வந்த தகவலால் பரபரப்பு
சென்னை: மதுரையில் வேனில் வெடிகுண்டுகளுடன் தீவிரவாத கும்பல் ஒன்று சுற்றி வருவதாக சென்னை ஆம்புலன்ஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்த தொலைபேசி தகவலையடுத்து மதுரையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவையின் தலைமை அலுவலகத்துக்கு நேற்று மதுரையில் இருந்து பேசுவாதாகக் கூறிக் கொண்டு ஒரு நபர் பேசினார். "மதுரையில் ஏற்கெனவே சைக்கிள் குண்டு வெடித்திருக்கிறது.. தற்போது வேன் குண்டு வெடிக்க இருக்கிறது.. வேன் ஒன்றில் தீவிரவாதிகள் இதற்காகவே சுற்றி வருகின்றனர்" என்று அந்த மர்ம நபர் கூறியிருக்கிறார்.
மேலும் தம்மை ஒரு டாக்டர் என்றும் அவர் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியிருக்கிறார். இத்தகவல் உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. மதுரை காவல்துறைக்கும் இத்தகவல் அனுப்பி வைக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டனர்.
சென்னைக்கு தகவல் கொடுத்த மர்ம நபரின் தொலைபேசி எண்ணை போலீசார் கண்டுபிடித்து விசாரித்தனர். அவர் போதையில் வாய்க்கு வந்தபடி உளறியிருப்பது தெரியவந்தாலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநாடு நடைபெற்று வரும் நிலையில் இத்தகைய வெடிகுண்டு மிரட்டல் தகவலால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications