நெல்லையை உலுக்கும் டெங்கு: நிரம்பி வழியும் மருத்துவமனைகள்
நெல்லை: டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சாதாரண காய்ச்சல் வந்தால் கூட டெங்கு காய்ச்சலாக இருக்குமோ என்ற பயத்தில் பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர், கடையம் பகுதிகளில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டார் நெல்லையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நெல்லை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 70 குழந்தைகள் உள்பட சுமார் 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை வெளியூரில் இருந்து வந்துள்ள மருத்துவக் குழுவினர் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை புதுவை மாநிலத்திலிருந்து பொது சுகாதார துறை சிறப்பு மருத்துவக் குழுவினர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு டெங்கு காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெறும் குழந்தைகளின் ரத்த மாதிரியை சேகரித்தனர். கடந்த சில ஆண்டுகளாக டெங்கு காய்ச்சல் ஏற்பட்டாலும் முதல் முறையாக உயிரிழப்பு அதிக அளவில் ஏற்பட்டுள்ளதால் நோய் பாதித்தவர்களின் ரத்தங்களை 4 விதமாக பரிசோதித்து உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
டெங்கு காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. சாதாரண காய்ச்சல் வந்தால் கூட டெங்கு காய்ச்சலாக இருக்குமோ என பயந்து பலர் ரத்த பரிசோதனை செய்து வருகின்றனர்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications