அஜ்மல் கசாபுக்கு அசைவ உணவு அடியோடு நிறுத்தம், சைவம் மட்டுமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Ajmal kasab
மும்பை: மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப், மரண தண்டனை விதிக்கப்பட்டு ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இறைச்சி வியாபாரியின் மகனான கசாவுக்கும் அவரது பாதுகாப்பு பணியில் இருந்த 6 போலீசாருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டு வந்தது. இவர்களுக்கான அசைவ உணவை போலீசார் சிலரே சிறை வளாகத்துக்குள் தயாரித்து வந்தனர்.

பொதுவாக ஆர்தர் ரோடு ஜெயிலில் கைதிகள் யாருக்கும் அசைவ உணவு வழங்கப்படுவது இல்லை. ஆனால், கசாபின் பாதுகாப்புக்கு இருந்த போலீசார் எப்போதாவது அசைவ உணவு தயாரித்து உண்பதோடு, கசாவுக்கும் வழங்குவது வழக்கம்.

இதற்கு மும்பை போலீசார் ஆட்சேபனை தெரிவித்ததைத் தொடர்ந்து சிறையில் கசாவுக்கு உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த போலீசார் கடந்த மாதம் இடம் மாற்றப்பட்டுவிட்டனர்.

இதையடுத்து அசைவ உணவு சமைப்பது நின்று போய்விட்டது. எனவே, கசாபும் சைவ உணவுக்கு மாறிவிட்டான். மற்ற கைதிகளுக்கு வழங்கப்படுவது போன்றே, இவனுக்கும் சைவ உணவு கொடுக்கப்படுகிறது. தண்டனை கைதிகளும், விசாரணை கைதிகளும் சேர்ந்துதான், சைவ உணவை சமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Pakistani gunman, Ajmal Kasab, has turned vegetarian in Arthur Road jail. Earlier, six police personnel who worked as cooks, provided him non-vegetarian fare occasionally. However, following objections by the Mumbai Police, the cooks were removed from jail last month. So Kasab now eats food prepared by the inmates.
Please Wait while comments are loading...