For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

24 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக வெளிநாடு செல்கிறார் மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங்சாங் சூய

By Mathi
Google Oneindia Tamil News

Aung San Suu Kyi
யாங்கூன்: மியான்மரில் ஜனநாயகத்துக்காகப் போராடி வரும் எதிர்க்கட்சித் தலைவர் ஆங்சாங் சூயி கடந்த 24 ஆண்டுகளில் முதல் முறையாக வெளிநாட்டுப் பயணமாக தாய்லாந்து செல்கிறார்.

மியான்மரில் ராணுவ ஆட்சியின் கீழ் ஏறத்தாழ 15 ஆண்டுகாலம் வீட்டுச் சிறையில் இருந்தவர் ஆங்சாங் சூயி. அண்மையில் அந்நாட்டில் ஜனநாயகம் திரும்பிய நிலையில் சூயியும் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யானார். மேலும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்களும் மியான்மருக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு சூயி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார். தாய்லாந்துக்கு இன்று சென்றடையும் ஆங்சாங் சூயி, அந்நாட்டு பிரதமரை சந்தித்துப் பேசுகிறார். பின்னர் கிழக்காசியாவின் பொருளாதாரம் தொடர்பிலான மாநாட்டில் பங்கேற்றுவிட்டு அங்கு வசிக்கும் மியான்மர் நாட்டவரை சந்தித்துப் பேசுகிறார்.

ஆங்சாங் சூயியின் வெளிநாட்டுப் பயணம் என்பது மியான்மரில் ஜனநாயகம் திரும்பியிருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

English summary
Myanmar democracy icon Aung San Suu Kyi heads to Thailand on Tuesday for her first trip abroad in more than two decades, ending an era of isolation and cementing her arrival on the global stage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X