For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குருவின் நீச்சம்.. சனியின் உச்சம்... கொடநாடு பயணத்தை கேன்சல் செய்தார் ஜெயலலிதா?

By Mathi
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்த நிலையில் கொடநாடு செல்வார் என்று கூறப்பட்ட முதல்வர் ஜெயலலிதா குருப்பெயர்ச்சி காரணமாக தமது பயணத்தை ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்ததும் ஓய்வெடுப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா கொடநாடு செல்வார் என்று கூறப்பட்டிருந்தது. அவர் தமது தோழி சசிகலாவையும் அழைத்துச் செல்வாரா? என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை.

முதலில் கொடநாட்டில் இருந்து அரசு கோப்புகளைப் பார்வையிட ஜெயலலிதாவுக்கு ஆளுநர் மாளிகை அனுமதி தரவில்லை என்று கூறப்பட்டது. அதாவது முதல்வர் ஜெயலலிதா தமது அதிகாரப்பூர்வ இல்லமாக கொடநாட்டை அரசுக் கோப்பில் இடம் பெறச் செய்யவில்லை என்பதற்காக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பின்னர் கொடநாட்டையும் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றிக் கொண்டார். ஆனாலும் கொடநாடு செல்லாமல் இருந்தது ஏன் என்ற கேள்வி எழுந்தது.

மே 17ம் தேதி நிகழ்ந்த குருப்பெயர்ச்சிதான் ஜெயலலிதா கொடநாடு செல்லாமல் இருந்ததற்கான காரணம் என்று கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் ஜாகதப்படி 10-வது இடத்தில் குரு இருக்கும் நிலையில் மலை வாசஸ்தலங்களில் சனிபகவான் உச்சத்தில் இருப்பாராம். இதனால் 10-ம் இடத்தில் குரு இருக்கும் ராசிக்காரர்கள் மலை வாசஸ்தலங்களுக்கு சென்றால் பாதிப்பு ஏற்படுமாம்.

இதனால்தான் ஜோதிடர்கள் ஆலோசனைப்படி ஜெயலலிதா கொடநாடு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இன்னும் ஒரு மாத காலத்துக்குப் பிறகுதான் கொடநாட்டுக்குப் போகலாம் என்றும் கூறியிருக்கிறார்களாம்.

English summary
Tamil Nadu Chief Minister Jayalalithaa reportedly canceled a Kodanadu trip because "Gurupeyarchi", sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X