For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலஙகைக்கு வந்த சேனல் 4 பெண் செய்தியாளர், கணவருடன் நாடு கடத்தப்பட்டாரா?

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கைக்கு வந்த சேனல் 4 ஊடகவியலாளர் ராணி சபாரத்தினம் நாடு கடத்தப்பட்டார் என்று கூறப்படுகிறது.

சேனல் 4 ஊடகவியலாளரும், அறிவிப்பாளருமான ராணி சபாரத்தினம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அவரது கணவரும், சேனல் 4 ஊடகத்தின் பணிப்பாளருமான ஸ்டூவர்ட் கொஸ்ரேவும் இலங்கைக்கு வந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த தேசிய புலனாய்வுப் பிரிவினர் அவர்கள் இருவரையும் கைது செய்து நாடு கடத்தியதாகக் கூறப்படுகின்றது. நாடு கடத்துவதற்கு முன்பு அவர்களிடம் தேசிய புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து இலங்கை பத்திரிகையாளர்களிடம் கூறுகையில்,

சேனல் 4 ஊடகவியலாளர் ராணி சபாரத்தினம் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவர் பிரிட்டன் பாஸ்போர்ட் மூலம் இலங்கை வந்துள்ளார். அவரது கணவரும் உடன் வந்துள்ளார். இலங்கை அரசுக்கு எதிராவனவர்கள் என அரசு தயாரித்துள்ள கறுப்புப் பட்டியலில் அவர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் அவர்களை கைது செய்த போலீசார் உடனே நாடு கடத்தினர் என்றனர்.

இதற்கு முன்பு அவர்கள் பல முறை வெவ்வேறு பெயர்களில் இலங்கை வந்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Reports are there that Channel 4 employee Rani Sabaratnam and her husband were extradited when they visited Sri Lanka, the birth place of the former.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X