For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனியார் வங்கிகளில் வருமான வரியை செலுத்தலாம்- ரிசர்வ் வங்கி

By Shankar
Google Oneindia Tamil News

RBI
சென்னை: தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளிலும் வருமான வரி செலுத்தலாம் என்று இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இது குறித்து இந்தியன் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இந்த மாதம் (ஜூன்) இறுதியில் அதிக அளவில் உள்ளது. இதனை தவிர்க்க கூடுதல் முகாம்கள் அமைக்கப்பட்டது. ஆனால் வரிப்பணத்தை வசூலிப்பதில் வங்கிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தவிர்க்க இந்திய ரிசர்வ் வங்கி தவிர, தமிழகத்தில் உள்ள தேசிய மையமாக்கப்பட்ட பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் சில குறிப்பிட்ட கிளைகளுக்கு வரியை பணமாகவோ காசோலையாகவோ பெற அதிகாரம் அளித்துள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு

பாரத் ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவான்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் படியாலா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, சின்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி, விஜயா வங்கி, அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மஹாராஷ்ட்ரா, கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, கார்ப்ரேஷன் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிபிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, தேனா வங்கி, இந்தியன் வங்கி என்று அந்த அறிக்கையில் தெரிக்கப்பட்டுள்ளது.

English summary
RBI has announce that, income tax can be paid through nationalised or privatised banks. Due to the rush in the income tax payment, RBI has announced this new plan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X