For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சர் கிரீக் தொடர்பாக டெல்லியில் இந்தியா -பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: அரபிக் கடலில் சர்ச்சைக்குரிய பகுதியான சர்ச் கிரீக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா மற்ரும் பாகிஸ்தான் நாடுகளிடையேயான பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் தொடங்கியது.

அரபிக் கடலில் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தையும் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியையும் பிரிக்கக் கூடிய சர்வதேச எல்லைப் பகுதியாக சர் கிரீக் பகுதி இருந்து வருகிறது. நீண்ட்காலமாக இந்தியா- பாகிஸ்தான் இடையே இருந்து வரும் எல்லைப் பிரச்சனிஅகளில் இதுவும் ஒன்றாகும். இருநாடுகளும் இதற்கான போரிட்டும் இருக்கின்றன. இந்தப் பகுதியில் பறந்த இந்திய விமானப் படை விமானத்தை 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதில் 16 படையினர் உயிரிழந்திருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சர் கிரீக் பகுதி முழுதும் தமக்கே சொந்தம் என்று பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால் இந்தியா இதனை நிராகரித்து குறிப்பிட்ட ஒரு எல்லை வரைதான் பாகிஸ்தானுக்கு சொந்தம் என்று கூறி வருகிறது.

இந்தப் பிரச்சனை தொடர்பாக இந்திய- பாகிஸ்தான் அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை இன்று காலை டெல்லியில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் பேச்சுவார்த்தையில் இருதரப்பும் ஏற்கக் கூடிய முடிவு எட்டப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

கடந்தவாரம்தான் சியாச்சின் பனிமலை விவகாரம் தொடர்பாக இருநாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
India and Pakistan begins the two-day talks in New Delhi on Monday to resolve the maritime boundary dispute in the Sir Creek region. The talks on the Sir Creek issue are being held a week after the inconclusive talks on Siachen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X