For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்துஅறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தனின் பதவிக்கு ஆபத்து?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தனின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு கிளம்பியுள்ளது.

தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில் நேற்று சென்னை அருகே உள்ள திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் அருகே 9 ஏக்கர் பரபரப்பளவில் பிரமாண்டமான பந்தலில் 1006 ஜோடிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா இலவசமாக திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த திருமண நிகழ்ச்சி காலை 9.30 மணி முதல் 10.29 மணிக்குள் நடைபெற்றது.

திருமண ஜோடி ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000 மதிப்புள்ள வெள்ளி மெட்டி, புடவை, வேஷ்டி, துண்டு, சட்டை, பித்தளை காமாட்சி விளக்கு, எவர்சில்வர் குங்கமச்சிமிழ், குடம், சாப்பாட்டு தட்டு, அன்னக்கரண்டி, பாய், தலையணை உள்பட 29 பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்படது.

இதில் ஒரு விஷேசம் என்னவென்றால் இந்து அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்ட திருமண வரவேற்பில் கூட அந்த துறை அமைச்சர் ஆனந்தனின் பெயர் இல்லை. மாறாக தலைமைச் செலயலாளர் திபேந்திரநாத் சாரங்கி பெயர் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இது குறித்து அரசியல் வட்டாரத்தில் கூறப்படும் தகவல் என்னவென்றால், இந்து அறநநிலையத்துறை அமைச்சராக உள்ள ஆனந்தனின் வீட்டில் சமீபத்தில் ஒரு தடபுடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்சிக்கு முதல்வருக்கு பிடிக்காத 'பத்துதலையாருக்கு' ஆனந்தன் அழைப்பிதழ் வைத்ததாகவும் அதனால் தான் ஜெயலலிதா கடும் கோபம் கொண்டு அவரை ஒதுக்கி வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இதை ஆனந்தன் தரப்பு முற்றிலும் மறுத்துள்ளதோடு, இது அரசியல் எதிரிகள் கிளப்பிவிடும் வதந்தி என கூறுகின்றனர்.

விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யும் போது இந்த கோபம் வெளிப்படும் என்று கூறப்படுகிறது.

English summary
M.S.M Anandan, Hindu Religious and Charitable Endowments minister seems to be in trouble. It is told that CM Jayalalithaa is angry with him and this may reflect while she reshuffles the cabinet soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X