For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொடநாடு 'முகாமைத்' தொடங்கினார் ஜெயலலிதா- ஒரு மாதம் ரெஸ்ட்!

Google Oneindia Tamil News

Jayalalitha
கோவை: முதல்வர் ஜெயலலிதா இன்று கொடநாடு சென்றார். அங்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் அவர் ஓய்வெடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு அதிமுகவினர் வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அவர் அங்கு இருக்கும் வரை அங்கிருந்தபடியே அரசுப் பணிகளைக் கவனிப்பார் என்று தமிழக அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து இன்று தனது தோழி சசிகலாவுடன் கொடநாடு சென்றார் ஜெயலலிதா.

முதல்வர் கொடநாடு எஸ்டேட்டில் முகாமிட்டிருப்பதால் அங்கு தற்காலிக தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது முதல்வர் அரசுப் பணிகளைக் கவனிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும், பணியாளர்களும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

ர்வாகிகள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் முதலமைச்சரை வழியனுப்பி வைத்தனர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று கொடநாடு செல்வதாகவும், அங்கு சில வாரங்கள் தங்கி அரசு பணிகளை மேற்கொள்வார் என்றும் நேற்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதன் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று காலை கொடநாடு கிளம்பிச் சென்றார். முன்னதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கியின் மகள் திருமண விழாவில் பங்கேற்றார் ஜெயலலிதா. பின்னர் அங்கிருந்து விமான நிலையம் சென்றார். அவருடன் தனி உதவியாளர்கள், செயலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் சென்றனர். பின்னர் தனி விமானம் மூலம் கோவை கிளம்பினார் ஜெயலலிதா.

விமான நிலையத்தில் அமைச்சர்கள் சார்பில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமைக்கழக நிர்வாகிகள் சார்பில் அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் ஆகியோர் மலர்கொத்து கொடுத்து முதல்வரை வழியனுப்பி வைத்தனர்.

அமைச்சர்கள், அதிமுக பிரமுகர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

English summary
Chief Minister Jayalalitha is leaving for Kodanadu with her aide Sasikala for a few week rest. She will look after the govt works from there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X