For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமஜெயம் கொலை வழக்கு: விசாரணையை துவக்கிய சிபிசிஐடி போலீஸ்

By Siva
Google Oneindia Tamil News

Ramajayam murder case
திருச்சி: கே.என். ராமஜெயம் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு விசாரணையை இன்று துவங்கினர்.

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த மே மாதம் 17ம் தேதி காலை வாக்கிங் போனபோது மர்ம நபர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். நெல்லையைச் சேர்ந்த கூலிப்படைகள் தான் இந்த கொலையை செய்திருக்கக் கூடும் என்று கூறப்பட்டது. அதன் பிறகு இந்த வழக்கு தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்திய போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வாலிபரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், வெளியே சொல்ல முடியாத காரணங்களுக்காக அவர் தான் ராமஜெயத்தை கொன்றதாகவும் செய்திகள் வெளியாகின.

இத்தனை நாட்களாகியும் ராமஜெயம் கொலை வழக்கில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கு விசாரணையை இன்று துவங்கினர்.

டி.ஐ.ஜி.ஸ்ரீதர், எஸ்.பி.ராஜேஸ்வரி, டி.எஸ்.பி. மலைச்சாமி ஆகியோர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். ராமஜெயத்தின் கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று கூறப்படுகிறது.

English summary
CBCID police have started their investigation about former DMK minister KN Nehru's brother KN Ramajayam murder case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X