For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங். முகாமிலிருந்து சங்மா பக்கம் தாவிய எம்.பி.-அதிர்ச்சியில் காங்.

Google Oneindia Tamil News

Sangma
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலின்போது பல்வேறு கட்சிகளிலிருந்தும் மாறி மாறி வாக்களிப்பார்கள் என்ற பரபரப்பு ஏற்கனவே இருந்து வரும் நிலையில் பகிரங்கமாகவே ஒரு காங்கிரஸ் எம்.பி. பி.ஏ.சங்மா பக்கம் போய் விட்டார். இதனால் காங்கிரஸ் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. அந்த எம்.பியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் கட்சிகளின் கொறடாக்கள் உத்தரவு இட முடியாது. மாறாக, எம்.பிக்கள் தங்களது விருப்பப்படி வாக்களிக்கலாம். இதனால்தான் சங்மா பெருத்த நம்பிக்கையுடன் மாஜிக் நடக்கும், நானே வெல்வேன் என்று கூறி வருகிறார்.

ஒருவேளை அவரது நம்பிக்கை வென்று விடுமோ என்ற சந்தேகம் எழும் வகையிலான ஒரு நிகழ்ச்சி இன்று நடந்தது. இன்றுதான் பிரணாப் முகர்ஜியும், சங்மாவும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

பிரணாப் முகர்ஜியி்ன் மனுத்தாக்கலின்போது ஒரு குழப்பமும் இல்லை. அதேசமயம், சங்மா வேட்பு மனு தாக்கலின்போதுதான் ஒரு பளீர் ஆச்சரியம் தென்பட்டது.

அதாவது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி அரவிந்த் நேதம் அங்கு காணப்பட்டார். சங்மாவுக்கு ஆதரவாக அவர் வந்திரு்நதார். இவர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் ஆவார். சங்மாவும் அதே வகுப்புதான். நேதம், அகில இந்திய பழங்குடியினர் பேரவை என்ற அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இதனால் காங்கிரஸ் முகாமில் கிலி பரவியுள்ளது.

இதையடுத்து ஏன் சங்மா மனு தாக்கலின்போது அங்கு இருந்தீர்கள் என்று கேட்டு நேதமுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம் காங்கிரஸ். நேதம் முன்னாள் மத்திய அமைச்சரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேதமைப் போல மேலும் பலர் சங்மா பக்கம் பாய்வார்களோ என்ற குழப்பமும், சந்தேகமும் காங்கிரஸ் முகாமில் கவலை அலைகளைப் பரவ விட்டுள்ளது.

English summary
The Congress has issued a showcause notice to MP Arvind Netam who backed BJP-sponsored presidential candidate PA Sangma. The Congress leadership has decided to take action against Netam, who was present with Sangma when the leader from the North-East filed his nomination for the presidential election in Parliament today. Netam is the chief of Tribal Forum of India which is backing Sangma in the presidential election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X