For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடியரசு தலைவர் தேர்தல்: சங்மாவுக்கு ஆதரவு அளிக்க இந்திய தேசிய முஸ்லிம் லீக் கோரிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை: குடியரசு தலைவர் தேர்தலில் சங்மாவை வெற்றி பெற வைக்க, மத சார்பற்ற கட்சிகள் முன்வர வேண்டும் என்று இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் தலைவர் ஜவஹர் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் சங்மா, கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை வெற்றி பெற வைக்க மத சார்பற்ற கட்சிகள் முன் வர வேண்டும்.

நாட்டின் குடியரசு தலைவராக இதுவரை, கிறிஸ்துவ மதத்தை சார்ந்த யாரும் பதவி வகிக்கவில்லை. எனவே தான் முதல்வர் ஜெயலலிதா முதன் முதலாக சங்மாவின் பெயரை முன்மொழிந்தார்.

இந்தியாவின் முதல் குடிமகனாகும் பதவி சுழற்சி முறையில் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களுக்கும் வழங்க வேண்டும். இந்திய ரூபாயின் மதிப்பு, டாலருக்கு நிகராக மிகவும் குறைந்து போனதற்கு, மத்திய அரசும், நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியின் திறமையற்ற நடவடிக்கையே கராணம். எனவே சங்மாவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
India National Muslim League leader Jawahar Ali requests to other parties to support Sangma for the President election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X