For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்புக்கு இங்கிலாந்து தடை

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்திய இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்புக்கு இங்கிலாந்து நாடு தாக்குதல் விதித்துள்ளது.

ஜெய்ப்பூர், டெல்லி உயர்நீதிமன்ற வளாக குண்டுவெடிப்பு சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத செயல்களில் தொடர்புடைய அமைப்பு இந்தியன் முஜாஹிதீன்.

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க திட்டமிட்டிருந்த 6 தீவிரவாதிகள் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தீர்மானம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே தடை விதித்துள்ளது.

இந்தியன் முஜாஹிதீன் அமைப்பானது அப்பாவி பொதுமக்கள் கூடும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் பயங்கரவாத அமைப்பு என்றும் இந்த அமைப்பால் இங்கிலாந்து நாட்டவர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் புரோகென்ஷிரே கூறியுள்ளார்.

English summary
The British government on Thursday banned the Indian Mujahideen (IM) describing it as a threat to national security and citing its alleged involvement in several terror attacks, including the Mumbai bombings.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X