For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல் நினோவால் இந்தியா, ஆஸ்திரேலியாவில் மழை அளவு கடுமையாக பாதிக்கும் அபாயம்

By Mathi
Google Oneindia Tamil News

El nino
டெல்லி: எல் நினோ எனப்படும் வானிலை மாற்றத்தால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் மழைப் பொழிவு மிகக் குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

கடலில் சூறாவளி ஏற்படுவதற்கும், மழை கொட்டி தீர்ப்பதற்கும், மழையே இல்லாமல் கடுமையான வறட்சி ஏற்படுவதற்கும் எல்-நினோ மற்றும் லா-நினா என்றழைக்கப்படும் வானிலை மாற்றம்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

இதற்கு தமிழில் என்ன அர்த்தம் சொல்லப்படுகிறது தெரியுமா?

எல்-நினோ என்றால் தமிழில் சின்னப்பையனாம்!

லா-நினோ என்றால் சின்னப் பொண்ணாம்!

இந்தியாவுக்கு தென்மேற்கு பருவமழை காலத்திலும், வடகிழக்கு பருவமழை காலத்திலும் மழை கிடைக்கிறது.

தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டுக்கு குறைவான மழைதான் கிடைக்கும். அக்டோபர் மாதம் தொடங்கும் வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை பெய்யும்.

ஆனால் இதுவரை போதிய மழை பெய்யாததற்கு எல்-நினோ' எனப்படும் வானிலை மாற்றம்தான் காரணம் என்கின்றனர்.

எல் நினோ என்றால் என்ன?

எல்-நினோ என்பது 3 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படக்கூடியது. எல்-நினோ ஏற்படும் சமயத்தில் காற்று மேற்கு நோக்கி வீசுவதால் கடல்நீரின் வெப்பம் அதிகரிப்பதோடு மேல்பரப்பில் உள்ள காற்றின் வெப்பமும் அதிகரிக்கும். அதன் காரணமாக உருவாகும் அடந்த மழை மேகத்தின் காரணமாக தென்அமெரிக்க நாடுகளில் அதிக மழை பொழியும்.

இதற்கு முன் கடந்த 1998-ம் ஆண்டில் எல்-நினோ வானிலை மாற்றம் ஏற்பட்டது. மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை அதிகரித்தது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகளில் மழை குறைந்து கடும் வறட்சி நிலவியது. இதற்கு முன்பு 2002-03 மற்றும் 1997-98, 1982-83-ம் ஆண்டுகளில் எல்-நினோ ஏற்பட்ட போதும் ஆஸ்திரேலியாவில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. அதேபோல் இந்த ஆண்டில் இந்த மாதம் முதல் வருகிற செப்டம்பர் வரை எல்-நினோ ஏற்படக்கூடும் என்றும், இதனால் வடக்கு மற்றும் தென் அமெரிக்காவில் தொடங்கி ஆசியா வரை வானிலையில் மாற்றம் ஏற்படும் என்றும் அமெரிக்காவின் வானிலை மையம் அறிவித்து உள்ளது.

எனவே இந்த எல்-நினோவின் காரணமாக இந்தியாவிலும், ஆஸ்திரேலியாவிலும் வழக்கத்தை விட மழை குறைவாகவே பெய்யும் என்று கூறப்படுகிறது.

English summary
As if we didn’t have enough to worry about with a deficient monsoon, the El Nino effect – a curious climatic phenomenon in the south pacific, which influences rainfall patterns in South Asia and South East Asia and in other parts of the world threaten to compound the damage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X