அசாம் இன மோதலில் 41 பேர் பலி: மே.வங்கத்தில் 10,000 பேர் அகதிகளாக தஞ்சம்

ஒன்றரை லட்சம் அகதிகள்
அசாமின் கோக்ரஜார், சிரான்கண்ட், துப்ரி ஆகிய மாவட்டங்களில் போடோ இன மக்களுக்கும் சிறுபான்மை இனத்தவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நீடித்து வருகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் எரிக்கப்பட்டுவிட்டதால் மொத்தம் சுமார் ஒன்றரை லட்சம் பேர் அகதிகளாக கிராமங்களைவிட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இடம்பெயர்ந்தோருக்காக 73 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 10 ஆயிரம் பேர் வரை அண்டை மாநிலமான மேற்கு வங்க மாநிலத்தில் அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ளனர்.
போலீஸ் துப்பாக்கிச் சூடு
இப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டதும்சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கோக்ரஜார் மாவட்டம் ராம்பூர், சபார்கட்டா ஆகிய இடங்களில் நேற்று காலையில் வன்முறையில் ஈடுபட்ட கும்பல் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மேலும் பல அடையாளம் தெரியாத உடல்கள் கண்டெடுக்க்கப்பட்டுள்ளன. இதனால் வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்தது.
13 ஆயிரம் ராணுவத்தினர் குவிப்பு
வன்முறைப் பகுதிகளில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர 13 ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பதற்றம் நிறைந்த பகுதிகளான துப்ரி, கோக்ரஜார், சிராங் ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் குவிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் படையினர் கொடி அணிவகுப்பை நடத்தினர். மேலும் கோக்ரஜார்,சிராங் உள்ளிட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சக குழு இன்று பார்வையிடுகிறது. இந்தப் பகுதிகளில் தற்போது அமைச்சர்கள் முகாமிட்டு நிலைமைகளை கண்காணித்து வருகின்றனர்.
ரயில் சேவை முற்றிலும் பாதிப்பு
ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் 2-வது நாளாக ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. ராஜதானி ரயில் மீதான தாக்குதலில் 4 பெட்டிகள் சேதமடைந்தன. இருப்பினும் பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. அனைத்து ரயில்களும் மேற்குவங்கத்தின் எல்லையான கூச்பீகாரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. நாட்டின் பிறபகுதிகளில் இருந்து ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களுக்கும் அசாம் வழியாகத்தான் செல்ல முடியும் என்பதால் வடகிழக்கு மாநிலங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது
வங்கதேச விஷமிகள் காரணமா?
இதனிடையே அசாம் வன்முறை சம்பவங்களுக்கு வங்கதேச சக்திகள் காரணம் என்று கூறப்படுவதை மத்திய அரசு நிராகரித்துள்ளது. மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் இதுபற்றி கூறுகையில், வங்கதேச விஷமிகள் இந்த வன்முறையைத் தூண்டிவிட்டிருக்கலாம் என்பதை மறுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications