For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'தமிழர்களை கொன்றவர் பிரபாகரன்'..- என்.கே.கே.பி. ராஜா பேச்சு.. உடன்பாடில்லை என்கிறது திமுக

By Chakra
Google Oneindia Tamil News

NKKP Raja
சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவை விட அதிகத் தமிழர்களைக் கொன்றவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என்று பேசிய முன்னாள் திமுக அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவின் பேச்சில் திமுகவுக்கு உடன்பாடில்லை என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் இது பற்றி அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் திமுக அறிவித்துள்ளது.

ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டு நோக்கத்தை விளக்க திமுகவின் பொதுக்கூட்டம் கடந்த வியாழக்கிழமை ஈரோட்டில் நடந்தது. அதில் ராஜா பேசியதாக ஜூனியர் விகடன் இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

உலக அளவில் டெசோ மாநாடு இன்று பேசப்படுகிறது. இதை நடத்த கலைஞருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சிலர் கேட்கிறார்கள். கலைஞரின் அனுபவ வயதுகூட அவர்களுக்கு இருக்காது. ஈழத் தமிழருக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர் கலைஞர். பாலசிங்கம், சந்திரஹாசன் போன்றவர்களை நாடு கடத்தியபோது அதனைத் தடுத்தவர் கலைஞர். ஆனால், ராஜீவ் காந்தியைக் கொடூரமாகக் கொன்றார்கள் விடுதலைப் புலிகள். இளம் தலைவர் ராஜீவ் காந்தியை நாம் இழந்தோம். பல குழுக்களாக இருந்த போராளி அமைப்புகளை ஒன்றாக இருக்கச் சொன்னார் கலைஞர். ஆனால், பிரபாகரன் அதைக் கேட்கவில்லை. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது ஆட்சியை மட்டும் நாம் இழக்கவில்லை. எத்தனையோ தி.மு.கவினர் வீடு எரிக்கப்பட்டது. ஈழத்துக்காகப் போராடிய மற்ற அமைப்புகளின் தலைவர்களை பிரபாகரன் கொன்றார். ஈழத்தை, தான் மட்டும் ஆள வேண்டும் என்ற சுயநலம் பிரபாகரனுக்கு.

தமிழகத்துக்குச் சிகிச்சைக்காக வந்த பார்வதியம்மாளைத் திருப்பி அனுப்பினோம் என்கின்றனர். அவர் வருவதை கலைஞரிடம் ஒரு வார்த்தை முன்கூட்டியே கூறி இருந்தால், அவரே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருப்பார். மாநில அரசு ஒரு வரைமுறைக்கு உட்பட்டுத்தான் செயல்பட முடியும். விடுதலைப் புலிகளை அழைத்து வந்து நாங்கள் போர்ப் பயிற்சி கொடுத்தோம். ஒரு அ.தி.மு.ககாரன் செய்ததாகச் சொல்ல முடியுமா? பழ.நெடுமாறன் எதற்கெடுத்தாலும் ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டு ஈழத்துக்குப் போவேன் என்று கூறுவார். ஆனால் போக மாட்டார். தைரியம் இருந்தால் ஈழத்துக்குப் போய் பிரபாகரனோடு சேர்ந்து போராட வேண்டியதுதானே? வைகோ, திருட்டு தோணி ஏறிப் போனார். ராஜபக்ஷேவைவிட அதிகத் தமிழர்களைக் கொன்றவர் பிரபாகரன். ராஜபக்ஷே, பிரபாகரனைக் கொன்றது கரெக்ட்'' என்றார்.

இவ்வாறு ஜூனியர் விகடன் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

திமுகவுக்கு உடன்பாடில்லை...:

இந் நிலையில் இன்று திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டக் கழகச் செயலாளர் என்.கே.கே.பி.ராஜாவும் - தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் வி.பி.ராஜனும், ஈரோடு நகரத்தில் நடைபெற்ற கழகப் பொதுக்கூட்டத்தில், இலங்கைப் பிரச்சனை தொடர்பாகப் பேசியதாக, ஜூனியர் விகடனில் வெளியான கருத்துக்களுக்கு தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு உடன்பாடு இல்லை. இது பற்றி அவர்கள் இருவரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

English summary
DMK has today said, it don't endorse the view of former minister NKKP Raja on LTTE chief Prabhakaran
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X