For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் வழக்கு: செப்-24-ந் தேதிக்கு ஒத்தி வைப்பு

By Mathi
Google Oneindia Tamil News

மதுரை: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் செப்டம்பர் 24-ந் தேதி ஒரே மனுவாக விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லையில் தாக்கப்படுவது; அவர்களுக்கு மத்திய கடலோர காவல்படை, கடற்படை பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக ஸ்டாலின் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் ஜனார்த்தன ராஜா, எம்.விஜயராகவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் நவநீதகிருஷ்ணன் மற்றும் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ரவீந்திரன் ஆகியோரிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டார். தமிழக மீனவர்கள் இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடிப்பதால், அடிக்கடி மோதல் நடப்பதாகவும், எல்லை தாண்டிப் போவதால்தான் இலங்கை மீனவர்கள் அவர்களைத் தாக்குகின்றனர் என்றும் மத்திய அரசு வழக்குரைஞர் ரவீந்திரன் கூறினார். இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பின்னர், கடல் எல்லை நிர்ணயிப்பது தொடர்பாக ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா, எல்லைப் பகுதி நிர்ணய அளவீடுகள் என்ன என்றும் கேட்டார். இதற்கு ரவீந்திரன், இந்திய எல்லைப் பகுதி சில இடங்களில் விரிவாகவும், சில இடங்களில் மிகக் குறுகலாகவும் இருப்பதால் இது சிக்கலான ஒன்று என்றார். அப்போது மனுதாரர் சார்பில் கச்சத்தீவில் மீன்பிடிப்பது தொடர்பாக குறுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், ரவீந்திரன் இந்த வழக்கு தொடர்பாக 6 பேர் சார்பாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் ஒன்றுதான் மீனவர் அமைப்பு சார்பில் தாக்கப்பட்டுள்ளது. எனவே இவை எல்லாவற்றையும் ஒன்றிணைத்து ஒரே நாளில் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவற்றை எல்லாம் விசாரித்த நீதிபதிகள், இந்த 6 மனுக்களையும் ஒன்றாகப் பட்டியலிட்டுப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டு, அடுத்த கட்ட விசாரணையை செப்.24க்கு ஒத்திவைத்தனர்.

English summary
The Union Government has not protected the lives and properties of Tamil fishermen despite being duty bound to protect them, said A Navaneethakrishnan, Advocate-General of TN, at the Madurai Bench of the Madras High Court on Friday. He said this while Justices P P S Janarthanaraja and M Vijayaraghavan heard the public interest writ petitions filed urging the State and the Centre to protect the interests of Tamil fishermen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X