For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடியரசுத் தலைவர், பிரதமர் சென்னை வருகையையொட்டி உச்சகட்ட பாதுகாப்பு

By Mathi
Google Oneindia Tamil News

Manmohan Singh
சென்னை: சென்னைக்கு இன்று ஒரே நாளில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் வருகையையொட்டி, உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு சென்னை வருகிறார். இதேபோல் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 9.50 மணிக்கு 100-வது ராக்கெட் ஏவப்படும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் மன்மோகன்சிங், இன்று மாலை 4.45 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். பின்னர், விமான நிலையத்தில் இருந்து மாலை 4.55 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீஹரிகோட்டா புறப்பட்டு செல்கிறார். இரவு அங்கேயே அவர் தங்குகிறார். பின்னர், நாளை காலை ராக்கெட் ஏவப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மன்மோகன்சிங், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 11.20 மணிக்கு மீண்டும் சென்னை வருகிறார். பின்னர், காலை 11.30 மணிக்கு தனி விமானம் மூலம் பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

சென்னைக்கு ஒரே நாளில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் வருகையையொட்டி, உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் 5 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

English summary
Operation Swift rolled out to check the efficiency of the City Police in identifying and apprehending decoy vehicles while the vehicles sent in North Zone remained elusive all , ahead of President and Prime Minister's visit to the city.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X