For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேத்தியைப் பெற்றெடுத்து மகளுக்கு கொடுத்த பாட்டி

By Siva
Google Oneindia Tamil News

சிகாகோ: சிகாகோவில் செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் பெண் ஒருவர் தனது மகளின் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

சிகாகோவைச் சேர்ந்தவர் சின்டி ரூட்ஜெல்(53). அவரது மகள் எமிலி ஜோர்டான்(29), மருமகன் மைக். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எமிலி கர்ப்பமானார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கர்பப்பையின் வாயில் புற்றுநோய் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து கருவை கலைத்ததுடன் எமிலியின் கருக்குழாய் அகற்றப்பட்டது.

குழந்தைக்காக ஏங்கிய எமிலிக்கு சிகாகோ மருத்துவமனை நம்பிக்கை அளித்தது. செயற்கை கருத்தரிப்பு மூலம் எமிலியின் கருமுட்டையை மைக்கின் விந்தணுவுடன் சேர்ந்து அதை எமிலியின் தாய் சின்டியின் கருப்பையில் ஏற்றினர். சின்டி இந்த வாரம் தான் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதற்கு எல்லி என்று பெயர் வைத்துள்ளனர்.

இது குறித்து சின்டி கூறுகையில்,

எமிலிக்கு குழந்தை பிறக்காது என்பதை கேள்விப்பட்டு மனமுடைந்துவிட்டேன். அதன் பிறகு செயற்கை கருத்தரிப்பு மூலம் நான் என் மகளுக்கு எனது பேத்தியைப் பெற்றெடுத்துக் கொடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

சின்டி எமிலி, எமிலியின் சகோதரர் மற்றும் தற்போது எல்லியை அறுவை சிகிச்சை மூலமே பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Cindy, a 53-year old granny gave birth to her own grandaughter Elle this week in Chicago.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X