For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கட்சி காணாமல் போவதைத் தடுக்க தெலுங்கானா எதிர்ப்பை கைவிடுகிறார் சந்திரபாபு

By Mathi
Google Oneindia Tamil News

Chandrababu Naidu
ஹைதராபாத்: மக்களவைத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடைபெறும் நிலையில் தேசிய அரசியலிலும் மாநில அரசியலிலும் காட்சிகள் மாறத்தொடங்கியுள்ளன. தெலுங்கானா கோரிக்கையை எதிர்த்து வந்த தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தமது நிலைப்பாட்டை திடீரென மாற்றி பல்யடிக்கத் தொடங்கியுள்ளார்.

ஆந்திராவில் தெலுங்கானா பகுதிகளை ஒருங்கிணைத்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இதற்கான போராட்டங்களும் வன்முறைகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிதான் தெலுங்கானா கோரிக்கையில் தீவிரம் காட்டி வந்தது. பின்னர் பாஜகவும் தெலுங்கானா மாநிலம் அமைக்க ஆதரவு தெரிவித்திருந்தது. தெலுங்கானாவை காங்கிரஸ் ஆதரிக்கும் என்று நம்பியிருந்த தெலுங்கான ராஷ்டிரிய சமிதி பின்னர் காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாகக் கூறி அந்த கூட்டணியில் இருந்து விலகிவிட்டார்.

இந்நிலையில் தொடக்கத்தில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியுடன் இணைந்து தெலுங்கானா கோரிக்கையை ஆதரித்த தெலுங்குதேசம் கட்சித் தலைவ சந்திரபாபு நாயுடு பின்னர் தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் மக்களவைத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும் என்ற நிலையில் சந்திரபாபு தமது தெலுங்கானா எதிர்ப்பைக் கைவிட்டு வருகிறார்.

மேலும் தெலுங்கு தேசம் கட்சி தெலுங்கானா கோரிக்கையை ஆதரிக்காவிட்டால் கட்சியை விட்டு வெளியேறப் போவதாக பல எம்.எல்.ஏக்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் கட்சியைக் காப்பாற்றவும் தேர்தலை எதிர்கொள்ளவும் வேறுவழியின்றி தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்கு எதிர்ப்பான நிலையை கைவிட சந்திரபாபு முடிவு செய்திருக்கிறார். மேலும் தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க ஆதரவு தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதவும் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

English summary
Telugu Desam Party is considering a plan to rewrite its opposition to the creation of a separate state of Telangana, a move that would take out a big obstacle to a consensus on statehood and add urgency to the Congress's brainstorming on what to do with its Andhra Pradesh conundrum ahead of the 2014 polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X