For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிரியா மீது துருக்கி பீரங்கித் தாக்குதல்: ஏராளமான வீரர்கள் பலி!

By Chakra
Google Oneindia Tamil News

Turkey renews strikes on Syria
அங்காரா: துருக்கியின் எல்லைக்குள் சிரிய நாட்டுப் படையினரின் பீரங்கு குண்டுகள் வந்து விழுந்து 5 பேரை பலியானதையடுத்து சிரியாவுக்குள் துருக்கி படைகள் பீரங்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தின. இதில் ஏராளமான சிரியா நாட்டு வீரர்கள் பலியாகியுள்ளனர்.

சிரியா நாட்டு அதிபர் பஸார் அல் ஆசாத்தை ஆட்சியில் இருந்து அகற்ற அந் நாட்டில் புரட்சி நடந்து வருகிறது. அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் இந்தப் புரட்சியாளர்களை ராணுவத்தைக் கொண்டு ஒடுக்கி வருகிறார் ஆசாத்.

இந் நிலையில் புரட்சியாளர்கள் மீது சிரியா ராணுவம் பீரங்கித் தாக்குதல்கள் நடத்தியபோது அவை தடம் மாறி எல்லையைத் தாண்டி துருக்கி பகுதியைத் தாக்கின. பீரங்கி குண்டுகள் வந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 5 துருக்கியர்கள் பலியாயினர்.

இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காவும் அதன் நெருங்கிய நாடான துருக்கியும் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந் நிலையில், அமெரிக்காவின் தூண்டுதலையடுத்து சிரியாவுக்குள் துருக்கி ராணுவம் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் பல சிரிய ராணுவத்தினர் பலியாகியுள்ளனர்.

மேலும் தேவைப்பட்டால் சிரியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவோம் என்றும் துருக்கி பிரதமர் ரிசெப் தயூப் எர்டோகன் அறிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் சிரியாவுக்குள் அத்துமீறி நுழைந்த துருக்கி நாட்டு போர் விமானத்தை சிரியா சுட்டு வீழ்த்தியது. இதையடுத்து இரு நாட்டு உறவுகள் சீர்குலைந்தன.

அமெரிக்காவுக்காக உளவு பார்க்கவே இந்த விமானம் தனது எல்லைக்குள் வந்ததாக சிரியா கருதுகிறது. மேலும் அதிபர் ஆசாதுக்கு எதிராக போராடும் புரட்சியாளர்களுக்கு துருக்கி தான் நிதியுதவியும், ஆயுதங்களும் தருவதாகவும் சிரியா குற்றம் சாட்டுகிறது.

English summary
Turkey resumed pounding Syrian targets early on Thursday, reportedly killing several soldiers, in reprisal for deadly cross-border fire that has sharply escalated tensions in the tinder-box region. The escalation came after mortar fire from Syria crashed inside the Turkish border town of Akcakale on Wednesday, killing five civilians, including a mother and her three children. It marked the first time that Turkish citizens had been killed as a result of fire from Syria since the uprising against President Bashar al-Assad's regime began in March 2011.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X