For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'லைட்டா' விட்டாலே பிச்சுக்கும் ஆவின் பால் கவர்.. 'கவர்மென்ட்' கவனிக்கலாமே...!

Google Oneindia Tamil News

Aavin Milk
சென்னை: ஆவின் பால் விற்பனையாளர்களும் சரி, அதை வாங்கி வீட்டுக்குக் கொண்டு செல்வோரும் சரி பெரும் கவலையில் உள்ளனர். காரணம், லேசாக கீழே போட்டாலோ அல்லது கை தவறி தாறுமாறாக எடுத்தாலோ பால் கவர் பிய்த்துக் கொண்டு பால் எல்லாம் வீணாகி விடுகிறது. நல்ல கடினமான கவரைப் போட்டு பாலை விற்றால் என்ன ஆவின் என்று நுகர்வோர் புலம்புகின்றனர்.

பால்காரர்களுக்கு ஒரு கவலை என்றால், வியாபாரிகளுக்கு ஒரு கவலையாக இருக்கிறது. ஆனால் இவர்களை விட பெரும் கவலையில் உள்ளவர்கள் அதை வாங்கிப் பயன்படுத்தும் நுகர்வோர்தான்.

குறிப்பாக ஆவின் பாலை வாங்குவோரின் கவலைகளைப் பட்டியலிட்டால் பெரிய 'மல்டி பேஜ் போட்டோ பியூச்சரே' போடலாம். அம்புட்டு கஷ்டத்தை அனுபவித்து வருகிறார்கள் ஆவின் பாலை வாங்கி பயன்படுத்துவோர்.

ஆவின் பால் கவர்கள்தான் மக்களின் பெரும் கவலையாக இருக்கிறதாம். தமிழகத்தில் ஏகப்பட்ட பால் விற்பனையாகிறது. இருப்பினும் மக்கள் அதிகம் விரும்பி வாங்குவது ஆவின் பாலைத்தான். காரணம், அது குழந்தைகளின் வயிற்றைப் பதம் பார்ப்பதில்லை என்ற ஆரோக்கியமான காரணத்திற்காக.

ஆனால் பாலை வாங்கும்போது அதன் கவர் படுத்தும் பாடு இருக்கே சொல்லி மாள முடியாதது. காரணம், அவ்வளவு லேசான கவரில் பாலை அடைத்து அனுப்புகிறார்கள். மற்ற பால் கவர்களுடன் ஒப்பிடுகையில் ஆவின் பால் கவர் மிகவும் லேசாக இருப்பதால் மிகவும் கவனமாக அதை கையாள வேண்டியுள்ளது. கை தவறி கீழே போட்டு விட்டாலோ அல்லது சற்று வேகமாக எடுத்து விட்டாலோ உடனே பால் கவர் பிய்த்துக் கொண்டு பால் எல்லாம் கொட்டி விடுகிறது. மின்னல் வேகத்தில் பாதி பால் கீழே கொட்டி விடும் என்பதால் மக்களுக்கு பால் கவரை கொண்டு போய் பத்திரமாக வீட்டில் வைக்கும் வரை பதைபதைப்புதான்.

அதேபோல வியாபாரிகளும் கூட பாலைக் கையாளுவதில் பெரும் கஷ்டத்தை சந்திக்கின்றனராம். ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து பால் பாக்கெட்டாவது பிய்ந்து போய் பால் வீணாகி விடுகிறது. இதனால் எங்களுக்கு நஷ்டம்தான் என்கின்றனர். ஆவின் பால் பாக்கெட்களை ரிட்டர்ன் எடுப்பதில்லையாம். இதனால் கவர் பிய்ந்து போனால் அது வேஸ்ட், எங்களுக்கு நஷ்டம்தான் என்று வியாபாரிகள் சொல்கின்றனர். அதேசமயம், திருமலா உள்ளிட்ட பிற பால் நிறுவனங்கள் பால் கெட்டுப் போனாலோ அல்லது கவர் பிய்ந்து வீணாகிப் போனாலோ ரிட்டர்ன் எடுத்துக் கொள்கிறார்களாம்

திருமலா உள்ளிட்ட பிற பால் நிறுவனங்கள் நல்ல வெயிட்டான கவரில் பாலை அடைத்து விற்கின்றனர். இதனால் கீழே போட்டால் கூட பால் கவர் பிய்ந்து போவதில்லை.

மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் பாலை நல்ல கவரில் அடைத்து விற்காமல், இப்படி நமீதா அணியும் சேலை லெவலுக்கு மிக மிக மெல்லிசான கவரில் போட்டு கொடுப்பதை சற்று நிறுத்தி நல்ல கவரில் போட்டு விற்கலாமே ஆவின்....!

English summary
Aavin milk covers make sellers and buyers big worry. Because of light weight covers the buyers and sellers are facing so many problems. Most of the sellers complain of damge in milk covers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X