For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சமூக வலைதள வசவுகள்..சிறைக்குப் போகும் பதிவர்கள்

By Mathi
Google Oneindia Tamil News

சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள்

சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள்

சென்னை: சமூக வலை தளமான ட்விட்டரில் பாடகி சின்மயிக்கும் பதிவர்களுக்கும் இடையேயான கருத்து மோதல் சிலரை சிறை போக வைத்திருக்கிறது. இதற்கு முன்பு மேற்கு வங்கத்தில் தமக்கு எதிராக கார்ட்டூனை ஃபேஸ்புக்கில் பரவவிட்டதால் பேராசிரியரை சிறையிலடைத்தார் அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி. ஆனால் தமிழகத்தில் சின்மயியைத் தொடர்ந்து 'சமூக வலைதள' பதிவுகள் என்பவை மிகவும் அபாயகரமானவை என்ற கருத்து பரவியிருக்கிறது. கருத்து சுதந்திரத்தை பறிக்கக் கூடியதாக இருக்கிறது.. இதற்கென ஒரு அமைப்பே தொடங்கப்பட வேண்டும் என்கிற அளவுக்கு ‘சமூக வலை தள' பயன்பாட்டாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அப்படியென்னவெல்லா நடந்துவிட்டது? படியுங்கள்...

பாடகி சின்மயி விவகாரம்

பாடகி சின்மயி விவகாரம்

பாடகி சின்மயில் தமிழ் உணர்வாளர்களை அவமதிக்கும் வகையில் இடஒதுக்கீடு, ஈழம், மீனவர் பிரச்சனை பற்றி கருத்துகளை ட்விட்டரில் தெளித்துவிட்டதாகவும் இதற்கு பதிலடியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது பிரச்சனை இல்லை! சின்மயி தொடங்கி வைத்த விமர்சனத்துக்கான எதிர்வினை என்பது சின்மயி மற்றும் அவரது அம்மாவுக்கு எதிரான ‘ஆபாச' அர்ச்சனைகளாகவும் போய்விட்டது. இதனால் சின்மயியை விமர்சித்தவர்கள் சிறைக்குப் போக நேர்ந்தது.

மனுஷ்யபுத்திரன் இலக்கிய செக்ஸிஸ்ட்- லீனா மணிமேகலை

மனுஷ்யபுத்திரன் இலக்கிய செக்ஸிஸ்ட்- லீனா மணிமேகலை

பாடகி சின்மயி விவகாரத்தில் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் செம பரபரப்பு நிலவியது. சின்மயி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் ஒரு கருத்தைப் பதிவு செய்தார். கவிஞர் லீனா மணிமேகலையோ, மனுஷ்யபுத்திரனை ‘இலக்கிய செக்ஸிஸ்ட்' என்று தாக்க அவருக்கு ஆதரவாக எழுத்தாளர்கள் அ.மார்க்ஸ், ஷோபா சக்தி குரல் கொடுத்தனர். மனுஷ்யபுத்திரனும் தம் பங்குக்கு பதில் கொடுத்தார். இந்த அக்கப் போர் இன்னமும் ஓயவில்லை.

கம்பி எண்ண வைத்த கார்த்தி சிதம்பரம்

கம்பி எண்ண வைத்த கார்த்தி சிதம்பரம்

பாடகி சின்மயி விவகாரம் முடிவதற்குள் சப்தமே இல்லாமல் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஒரு காரியத்தை செய்து முடித்தார். ட்விட்டரில், சோனியா மருமகன் வத்ராவைவிட கூடுதலாக சொத்து குவித்திருக்கிறார் கார்த்தி சிதம்பரம் என்று தட்டிவிட்டிருந்தார் புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர் ரவி. போலீஸ் துணையுடன் ரவியை தூக்கி உள்ளே வைத்துவிட்டார் கார்த்தி. இப்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் ரவி.! இப்படி சின்ன சின்னதாய் பஞ்சாயத்துகள் வர உச்சமாய் இரு பிரபலங்களின் இணைய தள மோதல் இப்பொழுது நீதிமன்றத்தின் கதவைத் தட்டியிருக்கின்றன! யார் அவர்கள்?

எஸ்.வி.ராஜதுரை VS ஜெயமோகன்

எஸ்.வி.ராஜதுரை VS ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன் தமது இணையப் பக்கத்தில் போகிற போக்கில் ஃபோர்டு பவுண்டேசனிடம் பணம் வாங்குவோரின் பட்டியலில் எஸ்.வி.ராஜதுரையையும் சேர்த்துவிடுகிறார். இதில் கடுப்பாகிப் போன எஸ்.வி.ஆர். ஜெயமோகனுக்குப் பதில் போட மீண்டும் ஜெயமோகன் பதிலிட.. இவர்களது மோதல் வெடிக்கிறது.... இந்த மோதலில் ஒரு சோகம், உடல்நலக் குறைவால் படுத்திருந்த கோவை விடியல் பதிப்பகம் சிவா தாம் மரணமடைவதற்கு முன்பாக ஜெயமோகனின் கருத்தை நிராகரித்து காட்டம் காட்டி எழுதியிருந்தார். தாம் செத்தாலும் வரக்கூடாது என்று ஜெயமோகனை கண்டித்திருந்தார். ஆனாலும் ஜெயமோகன் விடுவதாக இல்லை... வாதங்கள் தொடர இப்பொழுது நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் எஸ்.வி.ராஜதுரை. இந்த வழக்கில் ஜெயமோகன் நீதிமன்றப் படிகளேறக் காத்திருக்கிறார்

உருவாகிறது புதிய இயக்கம்?

உருவாகிறது புதிய இயக்கம்?

ஃபேஸ்புக்கில் மனுஷ்யபுத்திரன் பதிவு செய்திருக்கும் ஒரு கருத்து இது! "தகவல் தொழில்நுட்ப சட்டம் 66 a பிரிவு மக்களின் அடிப்படை உரிமைமீதான கொடூரமான தாக்குதல்.

English summary
After Singer Sinmay issue so many people fear to register their views in social networks like facebook, twitter etc..
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X