For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தங்கத்தின் தேவை சர்வதேச அளவில் 11% குறைந்தது.. ஆனால், இந்தியாவில் 9% தேவை அதிகரிப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

லண்டன்: சர்வதேச அளவில் தங்கத்தின் தேவையானது 3 மாதங்களில் 11 சதவீதம் குறைந்திருக்கிறது என்று சர்வதேச தங்க கவுன்சில் தெரிவித்திருக்கிறது.

ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரையிலான 3 மாத காலப் பகுதியில் சீனாவின் தங்க நுகர்வானது 8 சதவீதம் குறைந்திருகிறது. சீனாவில் தங்கக் கட்டிகள் மற்றும் நாணயத்தில் முதலீடு செய்வது 12 சதவீதம் குறைந்து போயுள்ளது. சீனாவின் பொருளாதாரத்தில் தற்போது ஒரு நிலையான நிலைமை இருப்பதால் இனி இத்தகைய ஒரு நிலைமை உருவாகாது என்பது தங்க கவுன்சிலின் நம்பிக்கை.

சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அடுத்த தங்க நுகர்வு என்பது சீனாவில்தான்! இந்தியாவின் தேவையோ முந்தைய ஆண்டுகளைவிட 9 சதவீதம் அதிகரித்திருக்கிறது்.

தங்க நகை வாங்குதல் என்பது சர்வதேச அளவில் 2 சதவீதம் அளவில் குறைந்து போயுள்ளது. இதே போல் தங்க நாணயத்தை வாங்குதல் என்பதும் 30விழுக்காடாக குறைந்து போயுள்ளது. அமெரிக்காவில் தங்க நாணய நுகர்வு என்பது 52 சதவீதமாக குறைந்திருக்கிறது. இதேபோல் துருக்கி, தாய்லாந்து, தைவான் ஆகிய நாடுகளிலும் தங்க நுகர்வு என்பது கணிசமாக குறைந்துவிட்ட்து.

English summary
Global gold demand dropped 11 per cent in the three months to September from record levels seen in the same period last year, dampened mainly by fading Chinese fervour as its economy slowed, with stronger Indian demand stemming a larger fall, the World Gold Council said.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X