For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காசா விவகாரம்: ட்விட்டரில் அடித்துக் கொள்ளும் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு

By Mathi
Google Oneindia Tamil News

Israel
காசா: இஸ்ரேலும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கமும் தீவிர யுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் புதிய போர்முனையாக 'ட்விட்டர்' தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இஸ்ரேல் பாதுகாப்பு படையின் பெயரிலும் ஹமாஸ் இயக்கத்தின் பெயரிலும் ட்விட்டரில் லைவ்வாக யுத்த வர்ணனைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வப்போது யுத்தகள வீடியோ காட்சிகளும் பதிவேற்றப்படுகின்றன. கடந்த புதன்கிழமையன்று தொடங்கிய இந்த லைவ் யுத்தகள வர்ணனையும், காட்சிகளும் இப்போதும் தொடர்கிறது.

ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தளபதி அகமது ஜபாரி கொல்லப்பட்ட செய்தியை 'Eliminated' என்ற போஸ்டருடன் வெளியிட்டது இஸ்ரேல் பாதுகாப்புப் படை. இதற்கு பதிலடியாக ஹமாஸ் தரப்பில், "எங்களது ஆசிர்வதிக்கப்பட்ட கரங்கள் உங்களது தலைவர்களையும் படைவீரர்களையும் நெருங்கும்" என்று எச்சரிக்கை விடப்பட்டது.

அதற்கு இஸ்ரேல் தப்பில், ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்களோ இளம் உறுப்பினர்களோ அனைவரது முகங்களும் இனிவரும் நாட்களில் தரையில் வீழ்ந்து கிடக்கும் என்று பதில் தரப்பட்டிருக்கிறது.

இதுமட்டுமின்றி கடந்த 20 மணி நேரத்துக்கும் மேலாக காசா பகுதியின் மீதான இஸ்ரேலின் உக்கிர வான் வழித் தாக்குதலை லைவாக ஹமாஸ் இயக்கம் வெளியிட்டுக் கொண்டே இருந்தது. மேலும் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நோக்கிய தங்களது ராக்கெட் தாக்குதலின் வீடியோ காட்சியையும் ஹமாஸ் வெளியிட்டது. இதற்கு பதிலடியாக 'காசாவின் ராக்கெட் குடோன் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்' என்று இஸ்ரேல் தரப்பில் ட்வீட் செய்யப்பட்டிருக்கிறது.

இப்படி இஸ்ரேலும் ஹமாஸ் இயக்கமும் லைவாக யுத்தம் நடத்திக் கொண்டிருக்க இப்பொழுது ட்விட்டருக்கு சிக்கல் வந்துவிட்டது. மோதலைத் தூண்டும் விதமான பதிவுகளை ட்விட்டர் எப்படி அனுமதிக்கலாம் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.

English summary
The Israel Defense Forces (IDF) and Palestinian Islamist group Hamas have opened a new front in the propaganda war, via Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X