For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கசாப் கழுத்தை நெரித்தது அப்சல் குருவுக்காக 5 ஆண்டுகளுக்கு முன்பே திரிக்கப்பட்ட கயிறு?

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தான் தீவிரவாதி கசாபை தூக்கிலிட பயன்படுத்தப்பட்ட கயிறு நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவுக்காக திரிக்கப்பட்டது என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

2001ம் ஆண்டு நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவுக்காக பீகாரில் உள்ள பக்சார் மத்திய சிறையில் உள்ள கைதிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கயிறு ஒன்றை திரித்துள்ளனர். அப்சல் குரு விரைவில் தூக்கிலிடப்படலாம் என்ற நம்பிக்கையில் அப்போதே கயிறை திரித்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவன் இன்னும் தூக்கிலிடப்படாததால் அந்த கயிறு இத்தனை ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில் கசாபை தூக்கிலிட அதிகாரிகள் புதிதாக கயிறு வாங்கவில்லை என்று இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அப்சல் குருவுக்காக திரித்த கயிறை வைத்து தான் கசாப் தூக்கலிடப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கசாபை தூக்கிலிட்டவுடன் அடுத்து அப்சல் குரு தூக்கிலிடப்படுவானா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இந்த தகவல் கிடைத்துள்ளது.

English summary
Reports are there that the rope used to hang Kasab was woven by Buxar central jail prisoners for 2001 Parliament attack death row convict Afzal Guru.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X