For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்சல் குருவின் கருணை மனு.. உள்துறை அமைச்சக பரிசீலனைக்கு அனுப்பினார் பிரணாப்

Google Oneindia Tamil News

Afzal Guru and Pranab
டெல்லி: அஜ்மல் கசாப் தூக்கிலிட்டப்பட்ட சூட்டோடு அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை என்னாச்சு என்று பாஜக உள்ளிட்டோர் கோஷத்தைக் கையில் எடுத்திருக்கும் நிலையில், அப்சல் குரு உள்ளிட்ட 7 பேரின் கருணை மனுக்கள் குறித்த பரிசீலனைக்காக அவற்றை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அதிகார மட்டத்தில் கூறுகையில், தன்னிடம் நிலுவையில் உள்ள கருணை மனுக்களை புதிய உள்துறை அமைச்சர் பதவியேற்றவுடன் அவரது பரிசீலனைக்கு அனுப்பி வைப்பது குடியரசுத் தலைவரின் கடமையாகும். அதன் அடிப்படையில், கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி புதிய உள்துறை அமைச்சராகப் பதவியேற்ற சுஷில் குமார் ஷிண்டேவுக்கு குடியரசுத் தலைவர் அனுப்பி வைத்துள்ளார்.

இந்த ஏழு மனுக்களும் ஏற்கனவே குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டிருந்தன. அவற்றுடன் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் கருத்துக்களும், உள்துறை அமைச்சக பரிந்துரைகளும் இணைக்கப்பட்டிருந்தன.

அப்சல் குரு மனுவைப் பொறுத்தவரை அவர் சார்பி்ல அவரது மனைவி தாக்கல் செய்திருந்த கருணை மனுவை ஏற்காமல் நிராகரிக்க வேண்டும் என்று டெல்லி அரசும், உள்துறை அமைச்சகமும் ஏற்கனவே குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்துள்ளன என்பது நினைவிருக்கலாம்.

இந்த ஏழு மனுக்கள் தவிர மேலும் 5 கருணை மனுக்களும் உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளன.

மேலும், குடியரசுத் தலைவர் வசம் 2 கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
President Pranab Mukherjee has returned seven mercy petitions, including that of Parliament attack case convict Afzal Guru, for consideration of the Union Home Ministry. Official sources said it was a normal procedure for the President to refer all pending mercy petitions for consideration to a new Home Minister after he takes charge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X