4-வது நாளாக முடங்கியது பார்லி.! மக்களவை நாளை மறுநாள் வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவதற்காக நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. மத்திய அமைச்சர் கமல்நாத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கான அனுமதி குறித்து வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்துவதில் பாஜகவும் இடதுசாரிகளும் உறுதியாக இருந்தன. மத்திய அரசோ விவாதம் மட்டும் போதும் என்றது. இதனால் ஒருமித்த கருத்து எட்டப்படாமலேயே அக்கூட்டம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடிய உடனேயே அமளி ஏற்பட்டது. மக்களவையில் சபாநாயகர் மீரா குமார், பெண் எம்.பிக்களைப் பார்த்து பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான கேள்விகளை முன்வைக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் 'எப்டிஐ நஹி சலேகா" என்ற சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிரான முழக்கம் தொடர்ந்ததால் மக்களவை முதலில் பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவையும் பகல் 12 மனி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பகல் 12 மணிக்கு கூடியபோதும் அமளி நீடித்ததால் நாளைவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையோ பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு மக்களவை கூடியபோதும் அமளி நீடித்ததால் நாளை மறுநாள் வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications