For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் இன்று காலமானார்!

By Mathi
Google Oneindia Tamil News

IK Gujral
டெல்லி: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் (வயது 92) இன்று மாலை 3.27க்கு காலமானார். 1997-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 1998 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நாட்டின் 12-வது பிரதமராக பதவி வகித்தவர் ஐ.கே. குஜ்ரால்.

குஜ்ராலின் வரலாறு....

1919-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி பிறந்த பஞ்சாப்பின் ஜீலம் பகுதி (தற்போது பாகிஸ்தானில் இருக்கிறது) ஐ.கே.குஜ்ரால், 1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றவர்.

தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிய ஐ.கே. குஜ்ரால், 1975-ல் அதாவது எமர்ஜென்சி அறிவிக்கப்படும்போது தகவல்தொடர்பு மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தவர் குஜ்ரா. பின்னர் சோவியத் யூனியனுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டார்.

1980களில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஜனதா தளத்தில் இணைந்தார். 1989-ல் பஞ்சாப்பின் ஜலந்தர் எம்.பி. தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வி.பி.சிங் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். 1996-ம் ஆண்டு தேவகவுடா அமைச்சரவையிலும் வெளியுறவுத்துறை அமைச்சரானார். அதன் பின்னர் ஐக்கிய முன்னணியின் தலைவராக ஐ.கே. குஜ்ரால் தேர்வு செய்யப்பட்டு 13 மாதங்கள் நாட்டின் 12-வது பிரதமராக பதவி வகித்தார்.

பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த குஜ்ராலுக்கு அண்மையில் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லியை அடுத்த குர்கானில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று மாலை 3.27 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

English summary
Former prime minister Inder Kumar Gujral passed away on Friday after prolonged illness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X