சென்னை: 144 தடையை மீறி கருவறை நுழைவுப் போராட்டம்!200 பேர் கைது!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Kapaleeswarar Temple
சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பகுதியில் போலீசார் பிறப்பித்த தடையை மீறி கருவறைக்குள் நுழைய முயற்சித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தந்தை பெரியார் தி.க.வினர் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வலியுறுத்தி சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கருவறைக்குள் நுழையும் போராட்டம் நடத்தப்படும் என்று கோவை ராமகிருட்டிணன் தலைமையிலான தந்தை பெரியார் தி.க. அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக த.பெ.தி.க.வின் நிர்வாகிகள் பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் த.பெ.தி.கவினர் போராட்டம் நடத்தினால் எதிர்ப்பு போராட்டத்தை நடத்தப் போவதாக பாரதிய ஜனதா கட்சி அறிவித்தது.

இதனால் கருவறை நுழைவுப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்த போலீஸ் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பகுதியில் 144 தடை உத்தரவையும் பிறப்பிதத்தது.

இந்நிலையில் இன்று காலை போலீசாரின் தடையை மீறி மயிலாப்பூரில் கோவில் கருவறைக்குள் நுழைய முயற்சித்து ஆர்ப்பாட்டம் செய்த 200 த.பெ.தி.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai police impose Section 144 at Mylapore Kabhaleeswarar temple area.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற