For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்ணின் தொண்டையில் மாட்டிய 10 பைசா... 24 வருடங்களுக்குப் பின் அகற்றம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மும்பை: சிறுமியாக இருந்த போது விழுங்கிய 10 பைசாவை 24 ஆண்டுகளுக்குப் பின் ஆபரேசன் மூலம் அகற்றியுள்ளனர் மும்பை மருத்துவர்கள்.

மும்பை பரேல் பகுதியைச் சேர்ந்தவர் ரத்னா அஹிர் (29). இவர் 5வது வயதில் 10 பைசா நாணயத்தை விழுங்கிவிட்டார்.

உடனே அவர் தனது தாயாரிடம் இதுபற்றி கூறினார். அவரும் சில வாழைப்பழங்களை உண்டால் அது வெளியேறி விடும் என கூறி கொடுத்தார். ஆனால் அதன்பிறகு அதைப்பற்றி அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

பல ஆண்டுகளாக எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் இருந்த அந்த நாணயம் திடீரென்று அஹிருக்கு குடைச்சல் தர ஆரம்பித்தது. 20 வயதில் திருமணம் ஆன பின்னர் அவர் உணவை விழுங்குவதில் சிறிது சிரமத்தை உணர்ந்தார். எதையும் சரியாக அவரால் விழுங்க முடியவில்லை. மருத்துவரிடம் செல்லவேண்டும் என்று கணவர் அழைத்தும் அஹிர் அதை உதாசீனம் செய்தார்.

இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு வலி பரேலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வந்து ஸ்கேன் எடுத்து பார்த்தனர். அப்போது 10 பைசா நாணயம் அவரது தொண்டைப் பகுதியில் இருப்பது தெரிந்து உடனே ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதிக வருடம் காரணமாக அந்த காயின் துருப்பிடித்திருந்தது. அதை சுற்றி தசை வளர்ந்திருந்தது. மயக்க மருந்து நிபுணர்கள் உள்பட 20 டாக்டர்கள் கொண்ட குழு ஒன்று இதை ஆபரேஷன் செய்து அகற்றினர்.

இதுமாதிரியான கேஸ் சகஜம்தான். ஆனால் 24 வருடங்களுக்கு முன்பு விழுங்கப்பட்ட 10 பைசா காயினை கஷ்டமான 2 என்டாஸ் கோபி முறைகளைப் பயன்படுத்தி மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணின் உணவுக் குழாய்க்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு மருத்துவமனை என்பதால் அவருக்கு அதிக செலவும் இல்லை. என்றாலும் அவர் விழுங்கிய 10 பைசா, அவரது ஸ்கேனுக்கு ரூ.2,500 செலவை ஏற்படுத்தி விட்டது.

English summary
10 paisa coin was removed from a woman's throat in Mumbai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X