தமிழகத்திற்கு தண்ணீர் விட கர்நாடகத்திற்கு உத்தரவிட முடியாது- காவிரி கண்காணிப்புக் குழு

டெல்லியில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் டி.வி.சிங் தலைமையில் காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், கர்நாடக தலைமைச் செயலர் ரங்கநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் இருமாநில தண்ணீர் தேவை குறித்தும், தமிழகத்திற்கு கர்நாடக அரசு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, ஜனவரி மாதம் மட்டும் 18 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுவதாகவும் மேலும் நிலுவையில் உள்ள 37 டிஎம்சி நீரையும் சேர்த்து 55 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா விடுவிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்திது.மேலும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுப்பு
இதற்கு கர்நாடக தலைமைச் செயலாளர் எதிர்ப்பு தெரிவித்தார். தண்ணீர் இருப்பு குறித்தும் அவர் விளக்கினார். தண்ணீர் திறக்க இயலாது என்றும் தெரிவித்தார். குடிநீருக்கு மட்டுமே தங்களிடம்தண்ணீர் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து கூட்டத்தின் இறுதியில்,குடிநீருக்கு மட்டுமே தங்களிடம் தண்ணீர் இருப்பதாக கர்நாடகம் கூறுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்குமாறு உத்தரவிட முடியாது என்று காவிரி கண்காணிப்புக் குழு கூறி விட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications