For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிப். 1ம் தேதிக்குள் டெல்லி பஸ்களில் சிசிடிவி, வெப்கேமரா பொருத்தப்படும்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி, வெப் கேமராக்கள் வரும் பிப்ரவரி 1ம் தேதிக்குள் பொருத்தப்பட உள்ளது.

டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து பெண்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள பெண்களின் பாதுகாப்பு குறித்து கண்காணிக்க உள்துறை அமைச்சகம் சிறப்பு குழு ஒன்றை அமைத்து.

அந்த குழு அளித்த பரிந்துரைகளை ஏற்று அரசு பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு,

அவசர எண் 100க்கு அழைப்பு வந்தால் உடனே அருகில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறை வாகனம் சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும். டெல்லி போக்குவரத்து கழகம் உள்பட அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி/ வெப்கேமரா வரும் 1ம் தேதிக்குள் பொருத்தப்பட வேண்டும். பேருந்துகளில் பணிபுரியும் அனைவரும் வரும் மார்ச் 1ம் தேதிக்குள் உரிய அடையாள அட்டையுடன் தான் பணிக்கு வர வேண்டும்.

பள்ளிகள் டிரைவர் உள்ளிட்டோரை பணியமர்த்தும் முன்பு அவர்கள் பற்றி போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும். போலீசார் அந்த நபர்கள் பற்றி விசாரித்து சரி என்று கூறினால் மட்டுமே பணியமர்த்த வேண்டும்.

தனிவாக இருக்கும் டிஸ்கோதெக்குகள் மற்றும் அனைத்து 5 ஸ்டார் டிஸ்கோத்தெக்குகள் இரவு 12.30 மணிக்கு இசையை நிறுத்திவிட்டு 1 மணிக்கெல்லாம் மூடிவிட வேண்டும். அவசர எண் 100ல் பணியாற்றும் நபர்களின் எண்ணிக்கை 60ல் இருந்து 100க உயர்த்தப்படுகிறது. பெண்களுக்கு கவுன்சிலிங் அளிக்கும் 1091 என்ற இணைப்பு இனி ஆபத்தில் உள்ள பெண்கள் அணுகும் இணைப்பாக பயன்படுத்தப்படும். இந்த இணைப்புகளுக்கு வரும் அழைப்புகளை எடுக்க பெண்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள்.

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பெண் போலீஸ் கொண்ட பெண்கள் உதவி மையத்தை அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 1ம் தேதிக்குள் அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி/வெப்கேமரா பொருத்த அனைத்து தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளது.

English summary
Government ordered that no school in Delhi will hire any transport vehicle of any kind without police verification of its owner and the crew. It was agreed that DTC/cluster buses should be GPS-enabled and it should be made functional at a Centralised Control Room by February 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X