For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போர் நிறுத்த மீறல் நீடித்தால் வேற வாய்ப்பை யோசிப்போம்: பாகிஸ்தானுக்கு விமானப் படை தளபதி வார்னிங்!

By Mathi
Google Oneindia Tamil News

Air Chief Marshal NAK Browne
டெல்லி: எல்லைப் பகுதியில் போர் நிறுத்த மீறல்கள் தொடர்ந்தால் வேற வாய்ப்புகளைப் பற்றி யோசிக்க வேண்டியதிருக்கும் என்று பாகிஸ்தானுக்கு விமானப் படை தளபதி என்.ஏ.கெ. பிரவுன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், இருநாடுகளிடையே எல்லைக் கட்டுப்பாடு கோடு இருக்கிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கிறது. கடந்த சில நாட்களால நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் ஏற்கத்தக்கது அல்ல. இத்தகைய நிலைமைகளை எதிர்கொள்ள நம்மிடமும் சில கட்டமைப்புகள் இருக்கின்றன.

எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இத்தகைய யுத்த நிறுத்த மீறல்கள் தொடர்ந்து நீடித்து வந்தால் நாம் வேறு சில வாய்ப்புகளைப் பற்றி யோசிக்க வேண்டியதிருக்கும் . அந்த வேறுசில வாய்ப்புகள் எது என்பதை வெளிப்படையாக விவாதிக்க முடியாது என்றார் அவர்.

English summary
Asserting that repeated ceasefire violations by Pakistan are "unacceptable", IAF chief Air Chief Marshal NAK Browne on Saturday warned that India may have to look at "some other options for compliance" if such incidents continue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X