For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை திடீர் நகரில் பயங்கர தீவிபத்து - 200 கடைகள் எரிந்து சாம்பல் - பல கோடி சேதம்

Google Oneindia Tamil News

Madurai
மதுரை: மதுரை திடீர் நகர் பகுதியில் இன்று அதிகாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 200 மரக் கடைகள் தீயில் கருகி சாம்பலாயின. ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் சேர்ந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தன. இந்த தீவிபத்தில் ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே திடீர் நகரில் முத்துப்பாலத்தின் கீழே நாயடிசந்தை பகுதி உள்ளது. இங்கு 200 மரக்கடைகள், இரும்பு கடைகள் உள்ளிட்ட 400க்கும் அதிகமான கடைகள் உள்ளன.

கட்டிடங்களுக்கு தேவையான நிலை, கதவு, ஜன்னல்கள், சட்டங்கள் உள்ளிட்ட மரச்சாமான்கள் வாங்க தென் மாவட்ட மக்கள் இங்கு வருகின்றனர். பழைய ரெடிமேடு மரப்பொருட்களும் அதிகளவில் இங்கு விற்கப்படுகின்றன. மரங்களுக்கான பூ வேலைப்பாடுகளையும் தொழிலாளர்கள் செய்து கொடுப்பார்கள். இதனால், விலை உயர்ந்த மரப்பலகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

நேற்று இரவு கடைகளை பூட்டிவிட்டு அனைவரும் சென்று விட்டனர். இந்த நிலையில், இன்று அதிகாலை இங்குள்ள ஒரு கடையில் பிடித்த தீ, மற்ற கடைகளுக்கும் மளமளவென பரவியது. காலை 4 மணிக்கு மரக்கடை பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறுவதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

வீரர்கள் 3 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை அணைக்க போராடினர். ஆனால், மரப்பலகைகள் மளமளவென எரிந்ததால், தல்லாகுளம், அனுப்பானடி பகுதிகளில் இருந்து மேலும் 3 வாகனங்கள் வந்தன.

தீ கட்டுக்கடங்காமல் போகவே, சோழவந்தான், மேலூர், திருமங்கலம் என புறநகர் பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வந்தன. ஆனால், தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. அருகில் மாநகராட்சி பிரசவ மருத்துவமனைக்கும் தீ பரவும் ஆபத்து ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் இருந்த கர்ப்பிணிகள், நோயாளிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

மதுரை நகரின் கிழக்கு, தெற்கு பகுதிகளில் இருந்து பெரியார் பஸ் நிலையத்துக்கு வரும் முக்கிய சாலை என்பதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. உடனடியாக மாநகராட்சி குடிநீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டு 80க்கும் மேலான தீயணைப்பு வீரர்கள் சுமார் நான்கரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அதற்குள் 200க்கும் அதிகமான மரக்கடைகள் முற்றிலும் சாம்பலாயின. தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சாம்பலாயின. இது நாசவேலையா, மின்கசிவா என்ற கோணங்களில் திடீர் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரக்கடைகளுக்கு இரவு பாதுகாப்புக்கு ஒரு காவலாளி இருந்தார். தீ பரவியதும் இவரும் வெளியில் ஓடி வந்துவிட்டார். இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர்ப்பலி இல்லை.

புகைப்படம்: குணா அமுதன்

English summary
More than 200 shops were gutted in a major fire accident in Madurai this morning. Goods worth many crore were damage completely in the mishap, police sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X