For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எகிப்து சென்ற ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு

Google Oneindia Tamil News

Mahmoud Ahmadinejad
கெய்ரோ: ஈரான் அதிபர் மஹமூத் அகமதிநிஜேத் மீது கெய்ரோவில் ஷூ வீசப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 30 ஆண்டுகளில் எகிப்துக்கு ஈரான் தலைவர் யாரும் போனதில்லை. இந்த நிலையில், அகமதிநிஜேத் கெய்ரோ வந்துள்ளார். இரு நாடுகளுக்கும் தொய்வடைந்து போயுள்ள உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார் ஈரான் அதிபர்.

இருப்பினும் அவர் அங்கு எதிர்பாராத வரவேற்பை சந்திக்க நேரிட்டது. சன்னி பிரிவு முஸ்லீம்கள் அகமதிநிஜேத்துக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். சிரியா அதிபர் பாஷர் அசாத்துக்கு ஆதரவாக ஈரான் இருப்பதைக் கண்டித்து இந்தப் போராட்டம் கிளம்பியுள்ளது.

கெய்ரோவில் உள்ள பழமையான மசூதிக்கு அகமதிநிஜேத் வந்தபோது பெரும் கூட்டமாக திரண்ட போராட்டக்காரர்கள் அவருக்கு எதிராக குரல் எழுப்பினர்.அப்போது ஒருவர் தனது ஷூக்களைக் கழற்றி ஈரான் அதிபரை நோக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் போராட்டக்காரர்கள் பலர் ஷூக்களைக் கழற்றி அகமதிநிஜேத்தை நோக்கி உயர்த்திப் பிடித்து ஆவேசமாக குரல் எழுப்பினர். அவர் மேலும் முன்னேற விடாமல் தடுக்கவும் முயன்றனர்.இதையடுத்து போலீஸார் தலையிட்டு போராட்டக்காரர்களிடமிருந்து பத்திரமாக அகமதிநிஜேத்தை அழைத்துச் செனஅறனர்.

English summary
President Mahmoud Ahmadinejad's visit to Cairo on Tuesday, the first by an Iranian leader in more than three decades, highlights efforts by Egypt's Islamist leader to thaw long frigid ties between the two regional heavyweights. Although the official welcome was warm, there was unscripted discord from Sunni protesters angry over Iran's support for the regime of Syrian President Bashar Assad, as well as decades of sectarian animosity between Shiite-led Iran and the region's Sunni majority.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X