For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்சல்குருவின் கடைசி தருணங்கள்.... திகாரிலேயே அடக்கம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Afzal guru
டெல்லி: டெல்லி திகார் சிறையில் இன்று காலையில் தூக்கிலிடப்பட்ட அப்சல்குரு கடைசி தருணத்தில் மிகவும் அமைதியாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2001ம் நாடாளுமன்ற தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளி அப்சல்குருவின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்ததைத் தொடர்ந்து தூக்கிலப்படுவது உறுதி என்று 43 வயதான அப்சல் குருவிற்கு தெரிந்துவிட்டது. இதனையடுத்து மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டு கடைசித் தருணங்களில் அமைதியாக இருந்ததாக திகார் சிறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

திகாரிலேயே அடக்கம்

மரண தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 8 ஆண்டுகாலமாக திகார் சிறையில் வாழ்வை கழித்த அப்சல்குரு இன்று காலை 8 மணிக்கு தூக்கிலப்பட்டான். தூக்குதண்டனை நிறைவேற்றப்படுவது குறித்து அப்சல்குருவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் அப்சல்குருவின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் யாரும் வரவில்லை என்பதால் திகார் சிறையில் உள்ள எண் 3க்கு அருகிலேயே அவனது உடல் அடக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

English summary
"He was very peaceful and calm during the final moments. He looked very composed," a top Tihar Jail official. Afzal Guru, who was executed in Delhi's Tihar Jail at 8 this morning, was buried soon after in the prison premises, sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X